பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்த பத்து 289 உடனாயும் இருக்கிறான் ஆதலால், அவனை எத்தன்' என்றார். “எத்தன்' என்ற சொல்லுக்கு ஏமாற்றுபவன், சூழ்ச்சிக்காரன் என்ற பொருள்களும் உண்டு. இக் கருத்து முன்னரே 'ஒளிக்கும் சோரனைக் கண்டனம்” (திருவாச: 3-141) என்ற பகுதியில் விளக்கப்பெற்றுள்ளது. 544. பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய . ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே 9 உலக உறவுகளுள் தாய் சேய் உறவு என்பதற்கு மேற்பட்ட உறவு வேறு எதுவுமில்லை. குழந்தையின் பொருட்டாகத் தன்னையே முழுவதுமாக அர்ப்பணித்தல் தாய் ஒருத்திக்கே உண்டு. அதனாலேயே இறைவனைத் தாய் என்று அடிகளாரும் பிறரும் பல இடங்களில் கூறிப்போயினர். ஆனால், இந்தத் தாயும் மனித உடம்புடன் இருக்கின்ற காரணத்தால் ஒரோவழி அவளையும் அறியாமல் சில தவறுகள் நேர்ந்துவிடக் கூடும். குழந்தையினிடத்துப் பேரன்பு உடையவளாயினும் வேறு ஒன்றில் கவனம் செலுத்தி அதில் ஈடுபட்டிருக்கும்போது பாலூட்ட வேண்டிய கடமையைக்கூட ஒரோவழி மறத்தலும் கூடும். சிற்றறிவினளாகிய உலகத் தாய்க்கு இது பொருந்துமேனும், முற்றறிவினனாய் உயிரோடு உயிராய்க் கலந்து நிற்கும் இறைவனுக்கு இவ்வாறு நிகழ்வதில்லை. குழந்தை அழாவிடினும் காலமறிந்து பாலுட்டும்