பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 காப்பாற்ற வேண்டும் என்ற அருங்கருத்தில் அவர் பின்னே செல்கிறார். நாளாவட்டத்தில் இதனை அறிந்துகொண்ட மணிவாசகர் தமக்குத் தெரியாமல் தம் பின்னே வரும் குருநாதரை இறுகப் பற்றிக்கொள்ளுகிறார். அதனையே “யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்’ என்கிறார். 545. புன் புலால் யாக்கை புரை புரை கனியப் பொன் நெடும் கோயிலாப் புகுந்து என் என்பு எலாம் உருக்கி எளியை ஆய் ஆண்ட ஈசனே மாசு இலா மணியே துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்கு ஆம் தொடக்கு எலாம் அறுத்த நல் சோதி இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே #0 'ஈசனே மாசிலா மணியே! என்னுடைய உடம்பினுள் இருக்கும் துளைகளெல்லாம் (புரைபுரை) கனிந்து இன்ப ஊற்றுப் பெருகும்படி செய்து, அதன் முடிவாகக் கடினமான எலும்புகளும் உருகும்படியாகச் செய்தவனே! என் உடம்பையே கோயிலாகக் கொண்டு, (என் பிடிக்குள் அகப்படும் அளவுக்கு எளியனாக வந்து) என்னை ஆட்கொண்டவனல்லனோ நீ! சோதி வடிவானவனே! உன் சோதி வடிவு என் உள்ளத்துள் புகுந்ததால் என்னுடைய துன்பம், பிறப்பு, இறப்பு ஆகிய அனைத்தும் அறுபட்டு ஒழிந்தன. இன்ப வடிவினனே உன்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்’ என்கிறார். - ওঁ ওঁ ওঁb