பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. திரு ஏசறவு (கட்டறிவொழித்தல்) திரு. ஏசறவு என்ற தலைப்பு, சிந்தித்துப் பொருள் கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஏசறவு’ என்ற சொல்லுக்கு நாணம் என்று பொருள் கூறியுள்ளனர் சிலர். ஏசறவு என்ற சொல்லுக்கு விருப்பம், அன்பு, புகழ்மொழி என்ற மூன்று பொருள்கள் உண்டு வேசறவு என்ற சொல்லுக்கு மனச்சோர்வு, துயரம் என்ற இரண்டு பொருள்கள் உண்டு. ஏகறுதல்’ என்று தொழிற் பெயராகக் கொண்டால் வருந்துதல், ஆசைகொள்ளுதல், பழித்தல் என்ற மூன்று பொருள்கள் உண்டு. எப்படிப் பார்த்தாலும் நாணம் என்று பொருள் கொள்வதற்கு இடமில்லை எனத் தோன்றுகிறது. ஒருவேளை நாணம் என்ற பொருளும் அச்சொல்லுக்கு உண்டு என்று வைத்துக்கொண்டாலும் இப்பகுதியில் வரும் பத்துப் பாடல்களையும் படித்துப்பார்த்தால் நாணமுறுதல் என்ற பொருள் எவ்விதத்திலும் பொருந்துவதாகத் தெரியவில்லை. பாடல்கள் போகின்ற போக்கைப் பார்த்தால் வருந்துதல், துயரம் அடைதல், புகழ்மொழிந்துரைத்தல் என்ற பொருள்களே பொருந்துவதாகத் தெரிகின்றது. உட்தலைப்பு இட்டவர்கள், சுட்டறிவு ஒழித்தல் என்று கூறி மேலும் ஒரு குழப்பத்தை உண்டாக்கியுள்ளனர். 'கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை (546 என்றும், "பாதமலர் காட்டியவாறு 548 என்றும், வார்கழல் வந்துற்று இறுமாந்து இருந்தேன்' (55) என்றும்,