பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது (552) என்றும், 'கருணையினால் பேர்த்தே நீ ஆண்டவாறு (553) என்றும், “நின் பரங்கருணைத் தடம் கடலில் படிவாமாறு (554) என்றும், சிவபெருமான் தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்’ (555) என்றும் வரும், பகுதிகளை ஒருங்குவைத்துக் கண்டால் தம் கீழ்மைக்கு நாணமடைந்து கூறினாரென்று சொல்வதற்கு இடமேயில்லை. மேலே காட்டிய பகுதிகள் இறைவனுடைய கருணைத் திறத்தை வியந்து புகழ்ந்து பாடியதாக உள்ளனவே தவிரச் "சுட்டறி வொழித்தல்' என்ற தொடருக்கு இங்கு இடமேயில்லை. - நிறைவாகக் கூறுமிடத்து வருந்துதல், துயரமடைதல் என்பவை ஒருபுறமிக்க, இறையன்பு காரணமாக எழுந்த புகழ்மொழிகள் என்ற பொருள்மட்டுமே இப்பகுதியில் தலைதுாக்கி நிற்பதை அறியலாம். 546. இரும்பு தரு மனத்தேனை ஈர்த்து ஈர்த்து என் என்பு х உருக்கிக் கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை உன் கழல் . இணைகள் ஒருங்கு திரை உலவு சடை உடையானே நரிகள் எல்லாம் பெரும் குதிரை ஆக்கிய ஆறு அன்றே உன் பேர் அருளே 1 இப்பாடலின் முதலிரண்டு அடிகள் திருவாதவூரர் மனநிலை திடீரென்று மாற்றம் பெற்று, மணிவாசகர் மனநிலையாக மாறிய சிறப்பை அறிவுறுத்துகின்றன. தம்முடைய மனம் எதிலும் ஈடுபட்டு உருகாதது என்பதை 'இரும்பு தரு மனத்தேன்’ என்றார். ஈர்த்துஈர்த்து என்று இருமுறை கூறினாரேனும் ஈர்த்தது ஒருமுறைதான். குதிரைமேல் வந்த திருவாதவூரர் குருநாதரைத் தூரத்தே கண்டு ஏதோ ஒரு சக்தியால் ஈர்க்கப்பெற்றுக்