பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு ஏசறவு 295 குதிரையினின்று இறங்கி மெள்ள நடந்துசென்று அவர் திருவடிகளில் தஞ்சமடைந்தார் அல்லவா? படிப்படியாக நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியை நினைவூட்டவே ஈர்த்துஈர்த்து என்று இருமுறை பேசினார். அடுத்து, குருநாதர் எலும்பை உருகச் செய்தார். எலும்பு உருகப்பெற்றால், உடலிலும் மனத்திலும் களைப்புத்தான் தோன்றும். ஆனால், இங்கு எலும்புகளின் உருக்கம் கரும்பு தரு சுவையாக மாறிற்று என்கிறார். இப்படி மாற உதவியது எது தெரியுமா? குருநாதரின் கழலிணைகள். 'காட்டினை” என்ற சொல் மத்திமதீபமாக நின்று, சுவை எனக்குக் காட்டினை என்றும், கழல் இணைகள் காட்டினை என்றும் பொருள்தந்து நிற்பதைக் காணலாம். நான்காவது அடியிலுள்ள மதுரை நிகழ்ச்சியை அடிகளார் இங்குப் பேசக் காரணமென்ன? இறைவன் செயற்கரும் செயல்களை எளிதாகச் செய்யும் பேராற்றல் உடையவன் என்பதைக் குறிக்க, நரிகளைப் பரிகளாக்கிய அவன் ஆற்றல் திறத்தை இங்கே கூறுவதால், இரும்பு தரு மனத்தவராகிய தம்மை ஒரே விநாடியில் மணிவாசகராக மாற்றியது அவனைப் பொறுத்தமட்டில் மிக எளிதான செயலாகும் என்பதைக் குறிக்கின்றார். 547. பண் ஆர்ந்த மொழி மங்கை பங்கா நின் ஆள் ஆனார்க்கு உண் ஆர்ந்த ஆர் அமுதே உடையானே அடியேனை மண் ஆர்ந்த பிறப்பு அறுத்திட்டு ஆள்வாய் நீ வா என்னக் கண் ஆர உய்ந்த ஆறு அன்றே உன் கழல் கண்டே 2 அவனிடத்தில் சரனம் புகுந்தவர்களுக்கு உண்ணுதற்குரிய ஆரமுதாக உள்ளான். "ஐயா! இம்மண்ணிடைத் தோன்றிய என் பிறப்பை அறுப்பதற்கு நீ மேற்கொண்ட உபாயம்தான் என்னே!