பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு ஏசறவு 297 550. கற்று அறியேன் கலை ஞானம் கசிந்து உருகேன் ஆயிடினும் மற்று அறியேன் பிற தெய்வம் வாக்கு இயலால் வார் ※ 密 கழல் வந்து உற்று இறுமாந்து இருந்தேன் எம்பெருமானே அடியேற்குப் பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே நின் பொன் - + அருளே 5 கலைஞானம் என்பது அறிவால் பெறப்படுவது, கற்றலாலும் கேட்டலாலும் கலை ஞானத்தை வளர்த்துக் கொள்ளலாம். அறிவின் துணை கொண்டு வளரும் இந்தக் கலைஞானம் எந்த அளவிற்கு ஒருவனை இறைவனடி சேர்க்கும் என்பது விடைகூற முடியாத வினாவாகும். ஆன்ம முன்னேற்ற அடிப்படையில் உய்கதியை நோக்கிச் செல்வோர் கல்விக்கோ கலைஞானத்திற்கோ அதிகம் மதிப்புத் தருவதில்லை. அப்படியிருக்க, ‘கற்றறியேன் கலை ஞானம்’ என்று அடிகளார் கூறியது சிந்திப்பதற்கு உரியதாகும். - கலை அறிவு-இதனை நான் அறிந்துகொண்டேன் என்ற அளவில் நின்றுவிடாமல், எல்லாக் கலைகளுக்கும் மூலமாக உள்ள பொருள் எது-என்ற முறையில் சிந்தனையைச் செலுத்தியிருந்தால் இந்தக் கலைஞானமே உய்கதிக்கு வழிகாட்டும். உண்மைக் கலைஞானத்தின் இறுதிப் பயனாகவுள்ள இறையருளைப் பெறக் கூடுமேயானால் அத்தகைய ஒரு கலைஞானம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. யாம். அதனைக் குறிக்கவே அடிகளார் 'கற்றறியேன் கலைஞானம்' என்கிறார். 'கற்றறியேன்” என்று கூறிய பிறகு 'கசிந்து உருகேன்’ என்று கூறியது சற்றுச் சிந்திக்கத் தக்கது. உண்மையான கலைஞானம் ஏட்டளவில் நில்லாமல் வாழ்க்கையைச் செம்மைப்படுத்த உதவினால் கசிந்து உருகும் மனநிலையை அது தரும். கசிந்து உருகுவதற்குக் கலைஞானம் தேவையில்லை. கலைஞானம் உண்மையானதாக இருப்பின் தி.சி.சி.Iv20