பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 கசிந்து உருகும் நிலைக்கு அது கொண்டு செலுத்தும். இவை இரண்டும் தம்மாட்டு இல்லையெனக் கூறிக்கொள்கிறார் அடிகளார். 'ஆயிடினும் பிற தெய்வம் மற்று அறியேன்” என்பதில் நுண்மையான ஒரு செய்தி இடம்பெறுகிறது. கலை ஞானத்தின் மூலம் மூலப்பொருள் எது என்ற ஆராய்ச்சியில் புகுந்துள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவு இன்றிப் பயின்று அவற்றால் தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலிற் செறிவு என்ற முடிவிற்கு வரலாம். அன்றி, கசிந்து உருகும் நிலை இருந்தால் யாரைக் கண்டவுடன் கசிதலும் உருகுதலும் ஏற்படுகின்றனவோ அவரே முதற்பொருள் என்று தெளியலாம். ஆனால் என்ன அதிசயம்! கலைஞானம், கசிந்து உருகும் நிலை இரண்டும் தம்பால் இல்லாவிடினும், பிற தெய்வத்தைக் கனவிலும் கருதியது இல்லை என்கிறார். அதாவது மேலே கூறிய இரண்டால் எந்த உண்மையை அறிய வேண்டுமோ, அதனைத் தாம் பெற்றுவிட்டதாக-அதாவது, பிற தெய்வத்தைப்பற்றிச் சிந்திக்காமல் இருக்கும் நிலையைப் பெற்றுவிட்டதாக அடிகளார் கூறுகின்றார். 4. உன் வாக்கு இயலால் நீ எனக்கு இட்ட கட்டயையை கோலமார்தரு பொதுவினில் வருக என்ற கட்டளை ஏற்றுக்கொண்டு உன் திருவடிகளை வந்து அடைந்தேன். அடைந்தவுடன், என்னுடைய பழைய வின்ைகள் முதலிய அனைத்தும் ஒரே விநாடியில் வெந்து ஒழிந்ததாலும், அற்புதமான அமுத தாரைகள் உடல் முழுதும் ஏற்றப்பெற்றதாலும் மனம், உடல் என்ற இரண்டிலும் நிறைவுபெற்றிருந்தேன்’ என்கிறார். 'இறுமாந்து இருந்தேன்’ என்ற தொடருக்கு, இன்றை உலகியற் பொருளைக் கொண்டு அரசன் முதலியோரை மதியாமல் அடிகளார் இருந்தார் என்று புராணக் காரர்கள்