பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு ஏசறவு 299 கூறும் கூற்றுச் சற்றும் பொருந்தாது. இறுமாந்து இருப்பன் கொலோ ஈசன்தன் பல்கணத்து எண்ணப்பட்டு’ (திருமுறை; 4-9-1) என வரும் நாவரசர் பாடலிலும் 'இறுமாந்து என்ற சொல் முழுநிறைவு பெற்றுப் பெருமகிழ்ச்சியடைதல் என்ற பொருளையே தருகிறது. . தகுதியில்லாத எனக்கு உன் திருவடிகளைத் தந்து முழுநிறைவு பெறுமாறு நீ செய்தது நாய்க்குத் தவிசு இட்டதுபோல அன்றோ ஆகும்’ என்கிறார். 551. பஞ்சு ஆய அடி மடவார் கடைக் கண்ணால் இடர்ப்பட்டு நஞ்சு ஆய துயர் கூர நடுங்குவேன் நின் அருளால் உய்ஞ்சேன் எம்பெருமானே உடையானே அடியேனை அஞ்சேல் என்று ஆண்ட ஆறு அன்றே அம்பலத்து அமுதே 6 'அம்பலத்து அமுதே! மகளிர் கடைக்கண் வலையிற் பட்டு வருந்திநின்ற என்னை உய்யுமாறு செய்தது உன் திருவருள் அல்லவா? என்றபடி 552. என்பாலைப் பிறப்பு அறுத்து இங்கு இமையவர்க்கும் - அறிய ஒண்ணாத் தென்பாலைத் திருப்பெருந்துறை உறையும் சிவபெருமான் அன்பால் நீ அகம் நெகவே புகுந்தருளி ஆட்கொண்டது என்பாலே நோக்கிய ஆறு அன்றே எம்பெருமானே 7 'தெற்குத் திசையிலுள்ள திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமான் என்ன செய்தான்? என்பால் தொடர்ந்து வரும் பிறப்பை அறுத்தான்; எனது உள்ளத்தில் குடிபுகுந்தான். இவற்றையெல்லாம் எவ்வாறு செய்தான்? குருந்தமரத்தடியில் இருந்தவாறே, தன் கடைக்கண்ணால் என்னைப் பார்த்தபொழுதே இவை அனைத்தையும் செய்துவிட்டான்' என்றபடி -