பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு ஏசறவு 301

  1. ᏞᎧhö பந்தங்களில் புகுந்து புரண்டவனாகிய என்னைக், கருணை காரணமாக இதிலிருந்து வேரோடு களைந்து உன் திருவடிகளில் சேர்ப்பதன் மூலம் 'ஆண்டுகொண்டாய் என்கின்றார். -

554. மருவு இனிய மலர்ப் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருகத் தெருவுதொறும் மிக அலறிச் சிவபெருமான் என்று ஏத்திப் பருகிய நின் பரம் கருணைத் தடம் கடலில் படிவு ஆம் ஆறு அருள் எனக்கு இங்கு இடைமருதே இடம் கொண்ட அம்மானே 9 'மருவுதற்கு இனிய மலர்போன்ற நின் திருவடிகள் என் மனத்திடைத் தோய்ந்து வளர்ந்து நிற்றலால், அதன் பயனாக என் உள்ளம் உருகத் தொடங்கியது. இவை இரண்டின் பயனாக, எனை நான் என்பதை மறந்து' சிவபெருமானே! என்று கூவிக்கொண்டே தெருவுதோறும் அலறித் திரிவதோடு அல்லாமல், உன்னுடைய பரங்கருணை என்ற கடலில் மூழ்கித் திளைக்குமாறு: அருள்செய்வாயாக’ என வேண்டுகிறார். •, 555. நானேயோ தவம் செய்தேன் சிவாய நம எனப் பெற்றேன் தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் - செய்தான் ஊன் ஆரும் உயிர் வாழ்க்கை ஒறுத்து அன்றே - . வெறுத்திடவே 10. தேன் ஆகவும் இன்.அமுதம் ஆகவும் இருக்கின்ற சிவபெருமான், நான் விரும்பி அழைக்காவிடினும் தானாகவே வந்து, புறத்தே எனக்குக் காட்சி தந்ததோடு அல்லாமல் எனது உள்ளத்திலும் புகுந்து அடியேனுக்கு அருள்செய்தான். என்ன அருளைச் செய்தான் தெரியுமா?