பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 புலால் நாற்றம் வீசுகின்ற இந்த உடம்பை, அவன் அருள் செய்த அந்தக் கணத்திலேயே வெறுத்து ஒறுத்திடுமாறு (தண்டிக்குமாறு செய்துவிட்டான். இதனை நினைக்கும்போதெல்லாம் இவ்வளவு பெரிய தவத்தை நானா செய்தேன்’ என்ற வியப்பு என் மனத்திடைத் தோன்றுகிறது. ஆனால், அவன் செய்த அருள் காரணமாகச் 'சிவாயநம என்ற ஐந்தெழுத்து என்னுள் நிலைபெற்று விட்டது என்கிறார். - தேகப்பற்று என்பது எல்லா உயிர்களையும் இறுதிவரை பற்றி நிற்கின்ற ஓர் உணர்வாகும். எந்த நிலையிலும் அதை நீக்குதல் என்பது கடினமான காரியம். ஆனால், அடிகளார் உள்ளத்தில் சிவபெருமான் புகுந்தவுடன், ஏனையோர்க்கு எளிதில் நடைபெற முடியாத உடம்பை வெறுத்து ஒதுக்கும் இச்செயல், ஒரே விநாடியில் அவருக்கு நிகழ்ந்துவிட்டது என்கிறார். அதனையே "ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். பெற்றேன்' என்ற சொல் பருப்பொருளாகவோ நுண் பொருளாகவோ உள்ள ஒன்று ஒருவனிடத்து வந்து நிலை பெற்று நிற்பதையே குறிக்கும். உணவு பெற்றேன், புகழ் பெற்றேன் என்ற தொடர்களில் உணவு என்ற பருப் பொருளும் புகழ் என்ற நுண்பொருளும் பெற்றவரிடம் தங்கிவிடுகிறது. வந்த பொருள் பெற்றவரிடத்து நிலைக்குமே யானால்தான், அதனைப் பெற்றேன்’ என்று சொல்ல முடியும். சிவாய நம என்ற மந்திரத்தைப் பலரும் ஒதினாலும் கூறுகின்ற அவர்கள்மாட்டு அது தங்கிற்று என்று சொல்ல முடியாது. ஆனால், அடிகளாரைப் பொறுத்தமட்டில் சிவபெருமான் தானே வந்து அருள்செய்தான் ஆதலின் 'சிவாயநம என்ற மந்திரம் அவரிடத்து வந்து நிலைத்து விட்டது என்ற நுண்ணிய கருத்தையே சிவாயநம எனப்பெற்றேன்' என்ற தொடரால் குறிப்பிடுகிறார். ع8 & تخم & Ša &