பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலப் பத்து 23 நாவரசர் பெருமான் அடுத்துக் குறிப்பிடுவது (யான் உன்) அடைக்கலம் கண்டாய்” என்று பாடுவதாகும். அது சரி, இடைக்கலத்திற்கு அடுத்து நிற்பது அடைக்கலம் தானே! ஆனால் திடீரென்று துடைக்கினும் போகேன்' என்று நாவரசர் பெருமான் கூறுவது முன்னர்க் குறிப்பிட்ட சிக்கல் பற்றியதாகும். - துடைக்கினும் போகேன்’ என்று ஏன் சொல்ல வேண்டும்? அடைக்கலம் ஏற்பவர் மனம் மாறி ஏற்றுக் கொள்ளாமல் விடுவதுமட்டு மல்லாமல் தம் எதிரில்கூட நிற்கவேண்டாம், எங்கேயாவது மறைந்துவிடு என்று சொல்லக்கூடிய நிலை வரலாம் அல்லவா? அப்படி ஒரு நிலையை மனத்துட் கொண்டு துடைக்கினும் போகேன்' என்கிறார். - இவ்வளவு சிறப்புடைய இந்த அடைக்கலம்பற்றி உலக இலக்கிய்ங்களில் அதிகம் காண்பதற்கு இல்லை. இந்திய நாட்டின் தனிச்சிறப்பிற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறினால், அதில் தவறொன்றும் இல்லை. இந்த அருமைப்பாட்டைப் புரிந்துகொள்ளாமல் பக்குவநிர்ணயம் என்று உள்தலைப்புத் தந்துள்ளனர். அது பொருந்தாமையை அறியலாம். - அடைக்கலம்பற்றிய இந்த அடிப்படைகளை அறிந்து கொண்ட பிறகு, அடிகளாரின் அடைக்கலப் பத்தைக் காணப்புகுவது நலம். - பத்துப் பாடல்களிலும் 'உன் அடைக்கலமே' என்று பாடிச்செல்கிறார். இந்த அளவோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. ஒரு படி மேலே சென்று. அடியேன் உன் அடைக்கலமே என்று கூறுவதோடு, உடையாய் என்ற ஒரு வார்த்தையையும் முன்னே பெய்வதன்மூலம் மிகச் சிறந்த முறையில் பெருந்துறை நாயகனைச் சிக்கவைக்கின்ற அற்புதத்தைக் காண்கிறோம்