பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'உடையாய்!” என்ற விளி ஆழமான பொருளை உடையது. Ljół) சமயங்களில் தம்மிடம் உள்ள விரும்பத்தகாத பொருளை எப்படியாவது உதறவேண்டும் என்று நினைக்கின்றவர், கண் காணாத இடத்தில் அதனை விட்டுவிடுவர். அப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் வேறொருவர் அப்பொருளை எடுத்துவந்து, “இது உங்களுடைய பொருள், நீங்கள் மறந்துவிட்டதாகத் தெரிகிறது; வைத்துக்கொள்ளுங்கள்” என்று கொடுப்பது இன்றும் உலகிடை நடைபெறுவதாகும். இப்படிக் கூறுபவர் எதிரே, பொருளை வேண்டாமென்று ஒதுக்கியவர் தப்பிப்பது கடினம். இந்த நிலையை அடிகளார் மனத்துட்கொண்டார்போலும். ஒவ்வொரு பாடலிலும் உடையாய் என்று விளிப்பதன் இரகசியம் இதுவேயாகும். 'நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் உன் உடைமைப்பொருள், நீ என் உடையான் என்ற கருத்தை ஒவ்வொரு பாடலிலும் வைத்துப் பாடுவதன் நோக்கம் இதுவேயாகும். - - - 408, செழுக் கமலத் திரள் அன நின் சேவடி சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து அடியர் உடன் போயினர் யான் பாவியேன் புழுக்கண் உடைப் புன் குரம்பைப் பொல்லாக் கல்வி ஞானம் இலா அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன் அடைக்கலமே i திருப்பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சி இப்பொழுது மறுபடியும் நினைவில் ஊசலாடுகிறது. அடியார்களோடு மறைந்துவிட்ட குருநாதர் என்றாவது ஒருநாள் மீட்டுவந்து அடியார் கூட்டத்தைக் காட்டித் தமமையும் அவர்களுடன் சேர்த்துக்கொள்வார் என்று எதிர்பார்த்த அடிகளாரின் எண்ணம் இதுவரை ஈடேறவில்லை.