பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலப் பத்து 25 அதனால் ஒரு விநாடி நேரமாக இருப்பினும் திருவடி தீட்சை செய்து தம்மை அடியனாக ஏற்றுக்கொண்டதை நினைவூட்டுவார்போல, உடையாய்! நீ என்னை இங்கு விட்டுச் சென்றாலும் நீதான் என் உடையான். நான் உன் அடைக்கலப் பொருளாவேன்’ என்ற கருத்தில் பேசுகிறார். அந்த அடியார்கள் 'பழுத்த மனத்து அடியார்கள், தாம் அதற்கு நேர்மாறாக 'அழுக்கு மனத்து அடியேன்” என்கிறார். அப்படியானல் இவர் ஒதுக்கப்பட வேணடியவர் தானே! அந்தத் துாய அடியவர்களோடு இவர் எப்படி ஒன்றாக இணையமுடியும் என்ற வினாவிற்கு விடை கூறுவார்போலத் தம்மை உடைமையாக ஏற்றுக் கொண்டபொழுதே பெருந்துறையான் இந்த வேறுபாட்டை நினைந்துபார்த்து ஒதுக்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஒருமுறை திருவடி தீட்சை செய்து, அடியார்களிடையேயும் இருக்கச் செய்துவிட்டார் அல்லவா? இது நடைபெற்றபொழுதே குருநாதர் 'உடையானாகவும் அடிகளார் உடமைப் பொருளாகவும் ஆகிவிட்டனர். உடைமையென்று ஏற்றுக்கொண்ட பிறகு குற்றம் குறைகள் பார்ப்பது சரியன்று. ஆகவே, நான் ‘உன் அடைக்கலம்’ என்று நினைவூட்டுகிறார். LT-೧೯r ஈற்றடியைக் கல்வி ஞானமிலாப் பொல்லா அழுக்கு மனத்து அடியேன்” என்று கொண்டு கூட்டிக்கொள்க. 409. வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின் - . பெருமையினால் பொறுப்பவனே அராப் பூண்பவனே பொங்கு கங்கை சடைச் செறுப்பவனே நின் திருவருளால் என் பிறவியை வேர் அறுப்பவனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே స్కో gléââIV 3