பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 உடையாய் என்று விளித்தமையால் உடையானுக்குரிய சில சீரிய பண்புகள் இப்பாடலில் இடம்பெறுகின்றன. பிறர் செய்யும் சிறுமையைப் பொறுத்தல் என்பது அனைவருக்கும் இயல்வது ஒன்றன்று. ஒரு சிலருக்கே உரிய இந்தப் பண்பின் அடிப்படை ஒன்றுண்டு. பிறர் செய்யும் சிறுமையை எண்ணிப்பாராதிருப்பதே அப்பெருமையின் அறிகுறி. எண்ணிப்பார்க்கத் தொடங்கினால் எண்ணிக்கை மிகமிக, ஒர் எல்லையில் அப்பொறுமை நீங்கிவிடும். எனவே, வெறுத்தற்குரிய சிறுமைகளையே штейт செய்யினும் அப்பெரியான் தன் பெருமை காரணமாக அதனைப் பொறுத்துக்கொள்கிறான். எப்பொழுதும் சினத்துடன் இருக்கும் அராவை (பாம்பை ஆபரணமாகக் கொண்டுள்ளான் என்றால், அவன் பெருமையின் எதிரே அரவும் அடங்கிவிடுகிறது. உலகை அழிப்பேன் என்ற ஆணவத்தோடு பொங்கி வந்த கங்கையைச் சடையில் தரித்துவிடுகிறான் என்பதால் அவன் பொறுமை, பெருமை என்பவற்றிற்கு இணையான ஆற்றலும் அவன்பாலுள்ளது என்பதை அறியமுடிகிறது. 'உடையாய் என விளித்து, தாம். அவனுடைய அடைக்கலம் என்பதையும் நினைவூட்டி, எந்த நிலையிலும் அவன தம்மைத் தள்ளமுடியாது என்பதையும் இரண்டு பாடல்களிலும் கூறிய அடிகளார், உடையவனுக்குரிய ஒரு கடமையையும் நினைவூட்டுகின்றார். அதாவது, ‘என் பிறவியை நீ போக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் முறையில் இதனைக் கூறவில்லை. அதற்குப் பதிலாக என் பிறவியை வேர் அறுப்பவனே என்று உறுதிபற்றி அவனுக்கு நினைவூட்டுகின்றார்.