பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலப் பத்து 27 410. பெரும் பெருமான் என் பிறவியை வேர் அறுத்துப் பெரும் பிச்சுத் தரும் பெருமான் சதுரப் பெருமான் என் மனத்தின் உள்ளே வரும் பெருமான் மலரோன் நெடுமால் அறியாமல் நின்ற அரும் பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே - 3 சென்ற பாடலைப்போல் அல்லாமல் இப்பாடல் புதுவகையில் அவன் பெருமையைப் பேசுகின்றது. சதுரப் பெருமான்’ என்பது பெரும் திறலையுடைய பெருமான் என்ற பொருளைத் தரும். செய்யுளில் இரண்டு செய்திகள் முன்னும் பின்னுமாக முறைமாற்றி வைக்கப்பெற்றுள்ளன. பிச்சுத் தருவது ஒன்று, பிறவியை வேரறுத்தல் இரண்டு. உலகியல் நாட்டம் இருக்கின்றவரையில் இந்த உடலைச் சேர்ந்த கருவி, கரணங்கள், அவற்றுக்குரிய இயல்புகளோடு இருக்கின்றவரை. பிறவியின்மேல் பற்று இருந்தே தீரும். கருவி கரணங்கள் செயலற்றுப் போனாலொழியப் பிறவியைப் போக்குதல் இயலாத காரியம். பெருமான் சதுரப்பாடு நிறைந்தவன் ஆதலின் அடிகளாரின் பிறவியை அறுப்பதற்கு முன்னர் அடிகளாரைப் பித்தனாக்கச் செய்தான். அதாவது, அடிகளாருடைய கருவி கரணங்கள் தம்தொழிலை மறக்குமாறு செய்தான்; பிறகு பிறவியை வேரறுத்தான் 'என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் தரும்பெருமான்’ என்ற தொடரை இவ்வாறு மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். - பிறவியைப் போக்கப் போகின்றான் என்றாலும் இப்பொழுது இருக்கும் பிறவி, பொறி, புலன்கள் வசப்பட்டு பிரச்சினையை உண்டாக்குமே, அது நடைபெறாமல் இருக்க பிச்சனாகச் செய்தான் என்கிறார்.