பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 முன்னே செல்வது ւDDrւյ, அடிகளாரின் ஆன்ம யாத்திரையில் துணையாக வருபவன் கையில் தழலை எடுத்துக்கொண்டு முன்னே செல்கிறான் என்ற குறிப்பைத் தழல்ஆடீ என்ற சொல்லால் பெறவைக்கிறார். - துணைவருபவன் கையில் ஆயுதத்துடன் வருவது பின்னே வருபவனுக்கு மிக்க மனத் தைரியத்தைத் தரும் ஆதலால் இங்கே "மூவிலைச் சூலப் படையானே' என்றார். "பரஞ்சோதி’ என்றதால் அக இருளைப் போக்கித் தருபவன் என்பதாயிற்று. தழல் புற இருளைப் போக்கவும், பரஞ்சோதி அக இருளைப் போக்கவும் உதவின என்க. பசுபதீ’ என்றதால் எல்லா உயிர்களுக்கும் தலைவனாக உள்ள அவனே, தனிப்பட்ட தம்மாட்டு இரக்கங்கொண்டு துணையாக வருகிறான் என்பதைக் குறிக்கிறார். துணையாக வருபவன் நடந்து வாராமல் ஒரு வாகனத்தின்மேல் வருவதில் பெரு நன்மையுண்டு. தேவை ஏற்பட்டால் யாருக்காகத் துணை வருகிறானோ அவன் தளர்ச்சியடையும்போது, அவனையும் துரக்கித் தன் வாகனத்தில் வைத்துக்கொண்டு செல்லமுடியுமல்லவா? இக்குறிப்பையும் உள்ளடக்கி இளமை பொருந்திய வெள்ளேற்றை உடையவனே என்கிறார். அவனையல்லாது உறுதுணை மற்று இல்லை என்ற முடிவிற்கு அடிகளார் வருவதற்குரிய காரணத்தைத் துணை வருபவனைப் புகழுவதுபோன்ற சொற்களால் அடிகளார் விளக்கிக் காட்டியுள்ளார். . துணைவருவதோடுமட்டு மல்லாமல், அவன் தமக்கு எஜமானனாகவும் உள்ளான் என்பதைக் குறிக்க 'உடையானே' என்றார். நான் என்றுமட்டும் கூறினால், தற்போத வெளிப்பாடு ஆகிவிடும். ஆதலால், ‘அடியேன் நான்’ என்றார்.