பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப் புலம்பல் 305 கூறியவர், அந்தத் திருவடிகள் ஆனந்தத்தைத் தந்ததுடன் அல்லும்பகலும் தமக்குத் துணையாக உள்ளத்தினுள்ளே ஒளிர்கின்றதை நன்றியுடன் நினைந்து பார்க்கிறார். . வாழ்க்கையில் ஒரோவழி துணையாக நின்றவர்களையே இந்த உலகம் புகழும். அப்படியிருக்க அல்லும் பகலும் ஆன்மாவிற்கே துணையாக நிற்கும் அந்தத் திருவடிகள் புகழப்படவேண்டியவை என்பதில் ஐயமில்லை. இந்தப் புகழ்ச்சி ஆனந்தம் காரணமாக வெளிப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம்பற்றி வெளிப்பட்டதா என்பதற்கு விடை கூறுவதுபோல இப்பாடலின் நான்காம் அடி அமைந்துள்ளது. 'உறுதுணை' என்ற வினைத்தொகையைப் பயன் படுத்தியதால் முக்காலத்திற்கும் இத்துணை பயன்படும் என்பதை அறிந்து கூறுகிறார். இது எப்படித் துணையாயிற்று துணை செல்ல வேண்டுமானால் துணையாக வருபவர் எதிர்ப்படக்கூடிய எல்லாவிதமான இடையூறுகளையும் வெல்லக்கூடியவராய் இருத்தல் வேண்டும். அப்படிப்பட்டவரே சிறந்த துணையாவார். பெருந்துறை நாயகனைப் புகழ்வதுபோல முதல் மூன்று அடிகள் அமைந்துள்ளன. அந்தப் புகழ்மொழிகளில் துணை இலக்கணம் குறிப்பாகப் பேசப்பெறுகிறது என்பதை அறிந்துகொண்டால், எப்படித் திருவடி உறுதுணை ஆயிற்று என்பதைப் புரிந்துகொள்ள முடியும். "சடையான்’ என்றதால் சீறி வரும் கங்கையையோ சடைக்குள் அடக்கியவன் எனவே இவனை வெல்வார் யாருமில்லை என்பது பெற்றாம். 'தழல்ஆடீ என்றதால் தழலைக் கையில் வைத்து ஆடுபவன் என்ற பொருள் வருகிறது. துணையாக வருபவன் பின்னே வருகின்றவனுக்கு வழி நன்றாகத் தெரிவதற்காகக் கையில் தீச்சுடரைப் பிடித்துக்கொண்டு