பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 556. பூங் கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே கோங்கு அலர் சேர் குவி முலையாள் கூறா வெண் நீறு ஆடி ஓங்கு எயில் சூழ் திருவாரூர் உடையானே அடியேன் நின் பூங் கழல்கள் அவை அல்லாது எவை யாதும் புகழேனே 1 . மிகப் பெரிய பதவியிலிருந்த திருவாதவூரர் தம் பதவிக்கேற்றமுறையில் அரசனையும், அவனையொத்த பெரியவர்களையும் புகழவேண்டிய சூழ்நிலையில் இருந்திருப்பார். இது தவறென்று கூறுவதற்குமில்லை. திருப்பெருந்துறை அனுபவத்திற்குப் பிறகு மனிதர்களைப் புகழ்கின்ற மனோநிலை அவரைவிட்டுக் கழன்றேவிட்டது. நிலைபேறில்லாத நன்மைகளைச் செய்ததற்காக அரசனையும், ஏனையோரையும் இதுவரை புகழ்ந்தார் அவர். ஆனால், திருப்பெருந்துறையில் கிடைத்த இன்ப அனுபவம் ஈடிணையில்லாதது. குருநாதரை அன்றி வேறு எவராலும் அதனைத் தர முடியாது என்று அறிந்து உணர்ந்தவுடன், அத்திருவடிகளையே புகழத் தொடங்கினார். இவ்வளவு பெரிய ஆனந்தத்தைத் தந்த திருவடியைப் புகழ்ந்தபிறகு வேறு யாரையும், எதையும் புகழத் தாம் ஒருப்படவில்லை என்பதையே பூங்கழல்கள் அவை அல்லாது எவை யாதும் புகழேனே' என்று பாடுகிறார். 557. சடையானே தழல் ஆடி தயங்கு மூ இலைச் சூலப் படையானே பரஞ்சோதி பசுபதி மழ வெள்ளை விடையானே விரிபொழில் சூழ் பெருந்துறையாய் அடியேன் நான உடையானே உனை அல்லாது உறு துணை மற்று அறியேனே 2 தயங்கு-விளங்குகின்ற, மழ - இளமை. எல்லையற்ற ஆனந்தத்தைத் தந்த திருவடிகளையன்றி வேறொன்றையும் புகழமாட்டேன் என்று சென்ற பாடலில்