பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 311 அந்த அனுபவத்தைத் திரும்பவும் தரவேண்டும் என்பதை நின் கழல் இணை காட்டி அருள் செய்யாய்” (402), இது செய்க என்று அருளாய்” (403), பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய்” (404), நின்தொண்டரில் கூட்டாய்” (405) அம்மலர்க்கே வந்திடப் பணியாய்” (406) என்ற தொடர்களில் பேசுவதைக் காணலாம். அப்படியிருக்கச் செத்திடப் பணியாய் என்றும் காய மாயத்தைக் கழித்து அருள் செய்யாய் என்றும் பேசுவது ஏன் ? இப்பதிகம் முழுவதையும் ஒருமுறைக்கு இருமுறை படித்தால், தெளிந்த ஒரு நோக்குடன் அடிகளார். இதனைப் பாடவில்லையோ என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. இந்த எண்ணம் வலுப்பெற, இப்பகுதியின் இறுதிப்பாடலின் (407) இறுதி அடியில் களிப்பெலாம்கெட மிகக் கலங்கிடுகின்றேன்’ என்று பாடியருளியது காரணமாய் அமைந்துள்ளது. இப்பகுதியின் முதலாவது பாடலில் வரும் 'விழித்திருந்து உள்ளக் கருத்தினை இழந்தேன்’ (398) என்பதில் உள்ள கருத்து என்பது பெருந்துறையில் கிடைத்த உள்ளார்ந்த இறையனுபவமாகும். இழந்தேன்’ என்றமையால், தம்முடைய கவனக் குறைவால் அதை இழக்க நேரிட்டது என்ற கருத்தைப் பேசுகின்றார்; இதில் வரும் இழந்தேன்’ என்பதற்கு விளக்கவுரையாக வருவது அடுத்த பாடலில் வரும் மன்ன என்னை ஓர் வார்த்தையுட்படுத்துப் பற்றினாய் (399) என்பதாகும். ஒரு வார்த்தை இவ்வளவு பெரிய அனுபவத்தைத் தந்தது என்றால், அது மிக எளிதாகக் கிடைத்துவிட்டது என்பதேயாம். எளிதாகக் கிடைத்து இருப்பினும், கிடைத்த பொருள் எத்தகைய அருமைப்பாடு உடையது என்பதை அடுத்த பாடலில் விரிவாக விளக்குகிறார். புற்றுமாய், மரமாய் நின்று பெருமுயற்சி செய்தவர்களுக்குக் கிடைக்காத ஒன்று தமக்கு எளிதாகக்