பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அப்படியானால் வேறு எவ்வழியில் இதனைப் பெறுவது? தம் முயற்சியாலோ, வழி துறைகளை அறிவதாலோ அடையமுடியாத ஒன்று, ஒரு முறை தமக்குக் கிடைத்தது என்பதை ஏறத்தாழ எல்லாப் பாடல்களிலும் அறிவிக்கின்றார். அப்படியானால் அது கிடைத்ததற்குக் காரணம் தம்முடைய முயற்சியோ தகுதியோ அன்று என்பதையும், அவனே விரும்பிவந்து தம்மை ஆட்கொண்டான் என்பதையும் பின்வரும் அடிகளில் குறித்துச் செல்கிறார். - 'பொய்யனேன் அக நெகப் புகுந்து (398), ‘என்னை ஓர் வார்த்தையுள் படுத்துப் பற்றினாய் (399), 'உன் அருள் புரிந்தனை” (400), எனை எற்றினுக்கு ஆண்டாய்? (40), 'எனை நயந்து இனிது ஆண்டாய்” (406) 'அச்சம் தீர்த்த நின் அருட்பெருங்கடல்” (407) என்ற தொடர்கள் இந்த அருளனுபவம் தமக்குக் கிடைத்தது எவ்வாறு என்பதை மிக்க உறுதியுடன் வெளிப்படுத்துகின்றன. முன்னர்க் கிடைத்த இந்த அருளனுபவம் இப்பொழுது போய்விட்டது என்றால், அதனை மீட்டும் தருவாயாக என்றுதானே கேட்கவேண்டும்? அதை விட்டுவிட்டுச் "செத்திலேன் (398) என்றும், உடல்தனைச் செற்றிலேன்' (399) என்றும், செத்திடப் பணியாய்” (400) என்றும், காய மாயத்தைக் கழித்து அருள் செய்யாய்” (402) என்றும், 'அறுக்கிலேன் உடல் துணிபட' (403) என்றும், இறக்கிலேன் உனைப் பிரிந்து (403) என்றும் பாடியதன் அடிப்படை யாது? - இதிலும்கூட இரண்டு வகைகள் பேசப்பெறுகின்றன. 'காயத்தைச் செற்றிலேன்' அறுக்கிலேன் உடல் துணிபட’ என்பவை இவரே செய்துகொள்ளும் பணிகளாகும். "செத்திடப் பணியாய் காயமாயத்தைக் கழித்தருள் செய்யாய்' என்பவை குருநாதர் செய்யவேண்டியவை.