பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 313 என்னையும் ஒரு பொருளாக்கி நாய்க்குத் தவிசு இட்டதுபோல் அருள்புரிந்தனை என்று சொல்லியிருக்க வேண்டும். தம்மை ஒரு பொருளாகக் குருநாதரே கருதிவிட்டார் என்ற நினைவு வந்தவுடன் அடிகளாருக்கு எல்லையற்ற களிப்பு ஏற்பட்டுவிட்டது. குருநாதர் பொருள் என நினைந்ததும் அருள் பாலித்ததும் அவருடைய கருணை காரணமாகவே என்பதை ஏனோ அடிகளார் புதிதாகத் தோன்றிய களிப்புக் காரணமாக மறந்துவிட்டார். அம்மறதி பெருங்கேட்டை விளைப்பதாயிற்று. தம்மை, அவன் பொருளாகக் கொண்டான் என்ற நினைவு வந்தவுடன், உண்மையிலேயே தமக்கொரு தகுதி இருக்கும்போலும் என்ற நினைவு வந்தது. அந்த நினைவு வந்தவுடன் களிப்பு மிகலாயிற்று. களிப்பு மிகுந்தவுடன் தலைகால் புரியவில்லை. அதன் பயனாகச் செய்யத் தகுவது இன்னது, தகாதது இன்னது என்ற வேறுபாட்டை மறந்து ஒரு விநாடி அலையப் புறப்பட்டார். அதனையே 'களித்துத் தலையினால் நடந்தேன்’ என்று பாடுகிறார். திருப்பெருந்துறையில் திருவடி தீட்சை செய்து அடிகளாரின் உட்புகுந்த குருநாதர், நிலையாகவே அங்குத் தங்கிவிட்டார். ஆனால், தம்முடைய இறையனுபவம் தளர்ந்து அடிநிலைக்கு வரும்பொழுது குருநாதர் தம்மோடு இல்லாமல் விலகிப்போய்விட்டாரோ என்ற அச்சம் அடிகளார் உள்ளத்தில் தோன்ற, அதைப் பல பாடல்களில் வெளிப்படுத்தியும் உள்ளார். இறையனுபவம் முதிர்ந்த நிலையில் குருநாதர் தம்முள் இருப்பதை அவரால் உணரமுடிகின்றது. அந்த உணர்வு தோன்றியவுடன் அவருடைய சிந்தனை இரண்டு வகைகளில் வெளிப்படலாயிற்று. இரண்டு வழிகளிலும் ஆனந்தம் நிறைந்துள்ளது. குருநாதர், அவர் தந்த ஆனந்தம், அதனுள் அழுந்திய அடிகளார் என்ற முறையில் வைத்துக் கண்டால், அனுபவித்த அடிகளார் சில நேரங்களில் ஒரு வினாடி தருக்குக் கொண்டும், இரண்டாவது நிலையில் ஒரு வினாடி தி.சி.சி.IV 21