பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 எல்லையற்ற களிப்புக் கொண்டும் சிந்தனையில் மிதக்கத் தொடங்கினார். 'நானேயோ தவம் செய்தேன்’ (555) .சிவபெருமான் தானே வந்து எனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான் என்பன போன்ற நினைவு வந்தபொழுது ஒரு வினாடி இறையனுபவத்தருக்கு ஏற்பட்டிருக்கலாம். இங்கு வரும் தருக்கு என்ற சொல்லுக்கு வாலாயமாக நாம் கொள்ளும் பொருளைத் தருதல் தவறாகும். ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டு இறுமாந்து இருப்பன்கொலோ திருமுறை:49-1 என்ற நாவரசரின் பாடலில் வரும் இறுமாப்பும் அடிகளார் கூறும் தருக்கும் ஒரே பொருளை உடையன. 143ஆம் பாடலில் வரும் 'தனித்துணை நீ நிற்க நான் தருக்கித் தலையால் நடந்த வினைத்துணையேன்” என்று வரும் பகுதியில் தலையால் நடந்ததற்குக் காரணம் கூறுவாராயிற்று. தனித்துணையாக உள்ளவன் உள்ளத்துள் நின்ற அதனால் எல்லையற்ற ஆனந்தம் பொங்கிவழியலாயிற்று. அதன் பயனாகத் தலைகால் புரியாமல் நடந்துகொள்ளும் இயல்பு மிகுந்தது. இது மிகுவதற்குரிய காரணத்தை இரண்டு சொற்களால் அடிகளார் வெளியிடுகின்றார். 143 ஆம் பாடலில் தருக்கித் தலையினால் நடந்தேன்’ என்று கூறும் அடிகளார், 400ஆவது பாடலில் களித்துத் தலையினால் நடந்தேன்’ என்று பாடுகிறார். தலைகால் புரியாமல் ஒருவர் இயங்க வேண்டுமானால், எல்லையற்ற ஆனந்தம் காரணமாக அமையலாம். இன்றேல், உலகியல் முறையில், உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் தம்மைத் தட்டிக்கேட்பார் யாரும் இல்லை என்ற காரணத்தால் ‘மண்டை வீங்கி (தருக்கித் தலை கால் புரியாமல் நடந்து கொள்ளலாம். உலகியல் முறையில் இவ்வாறு நடந்துகொள்வோர்களைத் தருக்குக் காரணமாக நடந்துகொள்கிறார்கள் என்று நாம் சொல்கிறோம். 143ஆம் பாடலில் யான் தருக்கித் தலையால் நடந்தேன்’ என்ற தொடரில் வரும் தருக்கி என்ற சொல்லுக்கு இவ்வாறு