பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 315 பொருள் சொல்லக்கூடாது என்பதை நாவரசரை எடுத்துக் காட்டி முன்னரே விளக்கியுள்ளோம். அடிகளார் கூறும் 'தருக்கு எல்லையற்ற களிப்பின் மிகுதியைக் காட்டுகின்ற சொல் என்பதை அவர் கூறும் சொற்களிலிருந்தே அறிந்து கொள்ள முடியும். இரண்டு இடங்களில் தலையால் நடந்தேன் என்று சொல்பவர் இத்தொடருக்கு முன்னர் ஓரிடத்தில் தருக்கி’ என்றும், மற்றோர் இடத்தில் களித்து' என்றும் கூறுவதால், இவ்விரண்டு சொற்களும் ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு சொற்களாகும். நீத்தல் விண்ணப்பம் 143ஆம் பாடல் விளக்க உரையில் இக்குறிப்பைத் தந்திருக்கவேண்டும். இது விடுபட்டுப் போனது என் கவனக்குறைவியானாலேயாகும். அருள் புரிந்தனை என்று 400ஆவது பாட்டில் கூறி, அடுத்த பாடலில் எற்றினுக்கு ஆண்டாய்? என்று கேட்பது சிந்தனையைத் துரண்டுகிறது. தகுதியில்லாத ஒருவரைத் தன் கருணை காரணமாகக் குருநாதர் ஆண்டார் என்றால் எற்றினுக்கு ஆண்டாய் என்ற வினா எவ்வாறு பொருந்தும்? இந்த இடத்தில் நின்று சிந்திக்க வேண்டும். குருநாதர், தகுதியில்லாத ஒரு பொருளைக்கூடப், பொருள் என நினைந்து ஆண்டுகொண்டார் என்றால் , ஒரு இரசவாதம் நடைபெற்றுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இரசவாதத்தில் மட்டமான இரும்பு பொன்னாவதுபோல் குருநாதர் ஆண்டுகொண்டதில் ‘புலையனாக இருந்த ஒருவர்கட மணிவாசகராக மாறிவிடுகிறார். இரும்பு பொன்னாகிவிட்டது என்றால் அதில் பொன்னின் குணம் இருக்கவேண்டுமே தவிர, இரும்பின் குணம் இருக்க முடியாது. அதுபோலக் குருநாதர் ஒருவரை ஆட்கொண்டார் என்றால், ஆட்கொள்ளப்பட்டவருக்குப்