பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 317 ஈடுபட ஒருப்படவில்லை. இக்கருத்தை நம் காலத்து வாழ்ந்த மகாகவி பாரதி, ஆரமுது உண்ணுதற்கு ஆசை கொண்டார்-கள்ளில் அறிவைச் செலுத்துவாரோ' என்ற தொடரில் எடுத்துக் கூறுகிறார். களிப்பு மீண்டும் வரவில்லை என்று தோன்றியவுடன் வாழ்க்கையையே வெறுத்துவிடுகிறார். வாழ்ந்தால் அந்தக் களிப்புடன் வாழவேண்டும்; இல்லாவிடின் செத்தொழி வதே மேல் என்று நினைக்கின்றார். அதனாலேயே களிப்பு மீண்டும் வாராமையால் செத்திடப் பணியாய் என்று பாடுகிறார். களிப்பு இருந்த காலத்தையும் அது போய்விட்ட காலத்தையும் இரண்டு வகைகளில் அடிகளார் உணர்ந்தார். உள்ளத்துள் உவகை பொங்கிவழிந்த நிலை அதனை இருவர் மட்டுமே அறிவர்-அதாவது அந்த உவகையைத் தந்த குருநாதர் அதனை அனுபவித்த அடிகளார் ஆகிய இருவர் மட்டுமே அறிவர். ஒருவர் தலையினால் நடக்கும் அளவிற்குப் பொங்கி எழுந்த களிப்பு, புற மெய்ப்பாடுகள் எதுவும் இல்லாமல் உள்ளடங்கியா இருந்திருக்கும்? புற மெய்ப்பாடுகளும் உண்டு என்பதை அறிவிக்கின்றார் அடிகளார். களிப்பு மிகுந்த காலத்தில் உள்ளம் பாகாய் உருகிற்று, கண்ணிர் ஆறாய்ப் பெருகிற்று; காதுகளில் அவன் புகழ் ரீங்கார மிட்டது; மனம் எவ்விதக் கோணலுமின்றி எவ்வித வடிவும் எடுக்கக்கூடிய முறையில் ஒழுங்குபட்டிருந்தது. களிப்புப் போய்விட்ட நிலையில் என்ன நிகழ்ந்தது? கண்கள் கண்ணிரை மறந்தன; செவிகள் அவன் புகழைக் கேட்கும் இயல்பை மறந்து இரும்பாயின; மனம் முண்டும் முடிச்சுமாகப் பராய் மரமாக மாறிவிட்டது.