பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அவர்கள்; தாமும் அலறுவதாகக் கூறுகிறார். அவர்கள் செய்த ஒரு பெருங்குற்றத்தை அதாவது அவனை அலட்சியப்படுத்தியதைத் தாம் செய்யவில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார். தருக்க ரீதியாக இத்தனை குற்றங்களைச் செய்த அவர்களை மன்னித்து உய்யக்கொண்டதுபோல் தம்மையும் உய்யக்கொள்ள வேண்டும் என்கிறார். அவர்கள் அலறியவுடன் அருள்செய்த அவன் தாம் இன்னும் அலறிக் கொண்டிருக்க அருள் செய்யாமல் இருப்பது அழகோ: என்கிறார். 'தொண்டரில் கூட்டாய்” (405 என்று கேட்பது ஏன்? திருப்பெருந்துறையில் கூட்டியது உண்மையாயின் தம்முடைய நினைவில் அறாமல் இருந்திருக்க வேண்டும். நமச்சிவாய என்ற ஒலி தம்முடைய நாவில் எப்பொழுதும் புரண்டு கொண்டிருந்திருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லை யாதலால் இப்பொழுது மறுபடியும் 'தொண்டரில் கூட்டாய்” என்று கேட்கின்றார். அடைக்கலப் பத்து திருவாசகப் பதிப்புக்களில் இன்று காணப்பெறும் முறைவைப்பிலும் செத்திலாப் பத்தை அடுத்துவருவது அடைக்கலப் பத்தாகும். எனது முறைவைப்பின்படியும் இந்த இரண்டு வைப்புக்கள் அமைந்திருக்கும் முறை ஏற்றுக் கொள்ளத் தக்கதேயாகும். 'செத்திடப் பணியாய் என்று கேட்டுக்கொண்ட பிறகு அடைக்கலம் என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? மேலோட்டமாகப் பார்க்கும்போது இது பொருத்தமற்றது போல் காணப்படும். ஆழ்ந்து நோக்கினால் இந்த முறைவைப்பின் ஆழம் நன்கு தெரியும்.