பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 விட்டவர்கள். ஐயா! இப்பொழுது ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். திருப்பெருந்துறையில் அமர்ந்திருந்தார்களே உன் அடியார்கள்; அவர்களிடையே என்னை இருக்குமாறு பணித்தவனும் நீதான். அப்படிப் பணிப்பதற்கு முன்னரே நான் சொத்தை (அழுக்குமனத்தடியேன்) (408) ஊற்றையேன் (536) என்பதை நீ அறிந்துகொண்டிருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ என்னை அவர்களுடன் அமருமாறு பணித்துவிட்டாய். 'அப்படி அமர்த்தப்பட்டதால் நான் சொத்தை என்பதை மறந்து, அவர்களோடு சமமானவன் என்று நினைத்துவிட்டேன். அவர்களைப் போலவே உன்னுடன் வந்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், என் சொத்தைக்குக் காரணமாக என்னிடம் இருந்தவை, புழுக் கண்ணுடைப் புன்குரம்பு, கல்வி ஞானமிலாப் பொல்லாத அழுக்கு மனம் என்பனவாம். இவற்றின் பயனாகவே நான் அடியார்களோடு செல்லமுடியவில்லை. 'இவற்றையெல்லாம் அறிந்திருந்தும் என்னை வருமாறு பணித்து, திருவடி தீட்சை செய்து, பொதுவினில் வருக என்று கட்டளையையும் இட்டாயவல்லவா? இவற்றுக்கு என்ன பொருள்? 'இவற்றையெல்லாம் நீ செய்தபொழுதே நீ உடையான் என்பதும் நான் உன் உடைமைப்பொருள் என்பதும் நிரூபணமாகிவிட்டன. எனவே, நான் எங்கே கிடந்தாலும் உன் அடைக்கலப்பொருள் என்பதை மறக்க உனக்கு உரிமையில்லை. சொத்தையானாலும் என்னை ஏற்றுக் கொண்டே தீரவேண்டும்’ என்ற கருத்தையே, உடையாய்! அழுக்கு மனத்து அடியேன் உன் அடைக்கலமே (408) என்று பாடுகிறார். இந்த நிலையில் குருநாதர் சொல்லாவிட்டாலும் அவர் சொல்லக்கூடிய ஒன்று அடிகளார் மனத்தில்