பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 323 தோன்றுகின்றது. 'மகனே! நான் ஆட்கொண்ட பிறகாவது நீ திருந்தி நல்வழிப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வெறுப்பனவே செய்கின்றாய். உன்னை என்ன செய்வதென்று புரியவில்லை என்று சொல்லியிருக்கலாம் அல்லவா! உடையவனின் கேளாத இந்தக் கேள்விக்கு 409 ஆம் பாடலிலே விடைகூறுகிறார் அடிகளார். "ஐயா! வெறுப்பனவே செய்கின்றேன் என்று என் செயல்களில் உள்ள வெறுக்கத்தக்க பகுதிகளை ஒன்றுகூட்டிப் பார்ப்பது உனக்கு அழகன்று. நீ பெரியவன் என்றும், பிரபஞ்ச காரணன் என்றும், கருணைக்கடல் என்றும் இந்த உலகத்தார் கூறுகிறார்களே! அதுதானே உன்னுடைய பெருமை? என்னுடைய வெறுக்கும் செயல்களைக் கணக்கிட்டுப் பார்ப்பது அந்த உன் பெருமைக்கு அழகன்று. என் பிழைகளைப் பொறுப்பதுதான் அழகும் நியாயமுமாகும். 'இது சரியில்லையென்று கூறுகிறாயா? இப்பொழுது நான் சொல்வதைக் கேள். நீ அணிந்திருக்கின்றாயே பாம்பு’, அது என்ன நன்மையை யாருக்குச் செய்தது? சீறுவதும், கடிப்பதுமாகிய வெறுக்கத்க்க செயல்களையே தொழிலாகச் கொண்ட இந்தப் பாம்பை நீ ஆபரணமாக வல்லவா அணிந்திருக்கிறாய்! 'அதுதான் போகட்டும் தலையில் கங்கையைத் தரித்திருக்கிறாயே, அவளென்ன லேசுப்பட்டவளா? உலகத்தையே அழித்துவிடுகிறேன் என்று ஆணவம் கொண்டு தரையில் இறங்கியவள்தானே! அது வெறுக்கத்தக்க செயலல்லவா? வெறுப்பனவே செய்யும் இந்த அராவையும் கங்கையையும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட உனக்கு, நான் செய்யும் வெறுக்கத்தக்க செயல்கள் எப்படிப் பெரியவையாகத் தெரிகின்றன?