பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 325 சூழலில் பட்டு திறம் மறந்திங்கு இருள்புரி யாக்கையிலே கிடந்து, எய்த்தனன் (412) என்ற முறையில் வரிசைப்படுத்திக் கொண்டு கண்டால், ஒரு புதிய பொருட்சிறப்பைக் காணமுடியும். முதல் மூன்று தொடர்களும் பாலுணர்வில் ஏற்படும் பரிதாபமான நிலையின் வளர்ச்சியைக் கூறுகின்றன. முதலாவது உள்ள பகுதி 'காமச்சுறவெறிய அழிகின்றனன்’ என்பதாகும். இந்த உருவகத்தில் மாதரைத் திரைகளாகவும் காமத்தைச் சுறாவாகவும் உருவகித் துள்ளார். திரை, சுறா ஆகிய இரண்டுமே புறத்தே இருந்து துன்பம் செய்பவை என்பதை எளிதாக அறியமுடியும். இரண்டாவதாக இருப்பது, நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டுப் புன்கணனாய்ப் புரள்வேன்’ (414) என்பதாகும். புறத்தே இருந்து துன்பந் தரும் எந்த ஒன்றிலிருந்தும் தப்பிப் பிழைக்க வழியுண்டு. அது முடியாமல் நுடங்கிடையார் வலையில் அகப்பட்டுப் புரள்வதாக இப்பாடலில் கூறுகின்றார். வலையில் அகப்பட்ட ஒன்று, எவ்வளவு புரண்டு கொடுத்தாலும் வெளிவருதல் இயலாத காரியம். அந்தக் கருத்தை மனத்திற் கொண்டு புரள்வேனை' என்கிறார். மூன்றாவதாக இருப்பது, உடைந்து தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் (413) என்பதாகும். புறத்தே இருந்து தாக்கும் பொருள்களிலிருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்புண்டு. ஆனால், மத்தின் சுழற்சி காரணமாகத் தயிர் உடைந்தாலும் பானையின் பக்க ஓடுகள் வரை சென்று மறுபடியும் மத்திற்கு வருகின்றது. தயிரின் போக்கும் வரவும் இடைவிடாமல் நடைபெறுகின்றது. எனவே, முன்னேற்றம் எதுவுமில்லாமல் சென்று சென்று வருவதால் ஏற்படும் தளர்ச்சியை இங்குக் குறிப்பிடுகின்றார். 41, 414ஆம் பாடல்களில் கூறியதைவிட இங்குப் பேசப்பெற்ற நிலை,