பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 327 மறந்து என்ற தொடரை இடையே பெய்வதன்மூலம் ஒரு மாபெரும் தத்துவத்தை விளக்கினாராயிற்று. இப்பெரு மக்கள் பாடல்களில், இதுபோன்ற சிறிய சொற்களை இடையே பெய்வதன்மூலம் நாம் சாதாரணமாகக் கூறிவரும் பொருளையே அடியோடு மாற்றிவிடுகின்றனர். உதாரணத்திற்கு ஒன்றைக் காணலாம். கோவலன் காலத்தில் பரத்தைவயிற் செல்லல், அவள் வீட்டில் தங்கியிருத்தல் என்பவை அனைத்து மக்களாலும் இயல்பு என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். காப்பியம் பாடிய இளங்கோவடிகளார் இதனை நன்கு அறிவார். எனவே, மாதவியிடம் கோவலன் சென்றது தவறு என்று கூற அவருக்குத் துணிவில்லை. அன்றைய சமுதாயம் முழுவதும் ஏற்றுக்கொண்ட ஒரு நிகழ்ச்சியை இவர் எவ்வாறு தவறு என்று கூறமுடியும்? ஆனாலும், இதனால் விளைந்த பெருங்கேட்டை எண்ணி, இதனைக் கண்டிக்க வருகிற இளங்கோ, மிக அற்புதமான முறையில் இதனை நிறைவேற்றுகின்றார். மாதவி இல்லம் புகுந்த கோவலன், அவளை விடுதலறியா விருப்பினனாகி அவளோடு வாழ்ந் தான் என்று கூறவந்த இளங்கோவடிகள், இத்தோடு நிறுத்தாமல் விடுதலறியா விருப்பினன் ஆயினன் வடுநீங்கு சிறப்பில் தன் மனையகம் மறந்தென்' (சிலம்பு. அரங்கேற்று-174.175) என்று பாடுவதால், அன்றைய சமுதாய வாழ்வையும் குறைகூறாமல் நடைபெற்ற தவற்றையும் ஒரு தொடரின் மூலம் எடுத்துக் கூறுகின்றார். அத்தொடர் தன் மனையகம் மறந்தென்’ என்பதாகும் பரத்தையிடம் செல்பவன், தன் மனையகத்தை மறக்கக் கூடாது; ஒரேயடியாக அங்கே தங்கிவிடவும் கூடாது என்பது அக்காலநிலை. இந்த இரண்டு தவறுகளையும், கோவலன் செய்தான் என்றதை யாரையும் கடிந்து கொள்ளாமல் தன் மனையகம் மறந்து என்ற தொடரால்