பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 337 'அஞ்சேல் என்றும் நீ கூறாமையால் நீயே வந்து என்னைக் கைதுக்கிவிடுவாய் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். நான் இருக்கும் இடத்திற்கு நீ வரப்போவதில்லை என்று உணர்ந்துவிட்டேன். ஆதலால், இறுதியாக ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன். இனி உள்ளது ஒரேயொரு வழிதான். நான் உன்னைநோக்கி வரவேண்டும். அதற்கு உன் அருள் உதவியே ஆகவேண்டும். எனவே, அருள்கூர்ந்து இருளைத் துரந்திட்டு இங்கே வா என்று நீ கூறுவாயேயானால் உன் ஆணையின் துணைகொண்டு நான் அங்கே வர ஏதுவாகும்’ என்கிறார். கண்ணுக்கும் காதுக்கும் குறிப்பிட்ட பணிகளை வைத்ததுபோல வாய்க்கும்கூட ஒரு பணியை வைக்கிறார் அடிகளார். அது என்னவெனின் பேர் ஆயிரமும் பரவித் திரிந்து எம்பெருமான் என ஏத்த ஆசைப்பட்டேன்’ (424) என்றும், ‘எம்பெருமான் எம்பெருமான் என்று என்தன் வாயால் அரற்றி: (425) என்றும் பாடியுள்ளமை நோக்கத்தக்கது. மேலே காட்டிய பாடல்களில் முறையே வாயால் ஏத்துதலும், வாய்விட்டு அரற்றுதலும் இடம்பெறுகின்றன. ஏத்துதுதல் வேறு; அரற்றுதல் வேறு. ஏத்துதலில் மனம், சித்தம் முதலிய கரணங்கள் தொழிற்படுகின்றன. அதன் # ##,#ffffff;"#S இறைவனுடைய பெருமையும், அவன் நாமங்களின் சிறப்பும் மனத்திடை வரிசையாக வருகின்றன. இறைவனுடைய ஒவ்வொரு பெயரும் அவனுடைய ஒவ்வொரு செயலையோ கருணையையோ ஆற்றலையோ குறிப்பது ஆதலின் அந்த ஒவ்வொரு பெயரும் நினைவுக்கு வரும்போது, அந்தப் பெயருக்கு உடையவன்மாட்டு. பக்தியும் அன்பும் மனத்திடை ஊறுகின்றன. ஆனால், ஒவ்வொரு நாமமாகச் சொல்லத் தொடங்கியவுடன் மனத்திடை அன்பு கனியக் கனியப் பெயர்களை வேறு படுத்தித் தனித்தனியாகச் சொல்லும் ஆற்றல் குறையவே,