பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 வலுவாக நிலைபெற்றுவிட்டது. எனவே, 'ஐயா இன்னும் நீ எங்கிருக்கிறாய் என்று தெரியவும் இல்லை. ஒரு கூக்குரல் இடுவாயேயானால் (கூவிக்கொள்ளாய்) நீ அண்மையில் தான் இருக்கிறாய் என்ற தென்பு ஏற்படும். "ஐயா! உன் குரலைக் கேட்கவேண்டும் என்று ஏன் விரும்புகின்றேன் தெரியுமா? நைந்துபோன என் உள்ளத்திற்கு உன் குரல் ஒரு தென்பைக் கொடுக்கும் என்பதுமட்டுமன்றித் திருப்பெருந்துறையில் உன்னிடமிருந்து வந்த மூன்று சொற்கள் திருவாதவூரனாகிய என்னை மணிவாசகனாக மாற்றியதை அறிவேன். இப்பொழுது மறுபடியும் உன் குரல் கேட்டால் 'சீவார்ந்து ..சிறுகுடில் இது சிதையும்" என்னும் உறுதியுடையேன். ஐயா! இதுவரை நீ என் கண்முன்னர் வராவிட்டாலும் என்னை நெருங்கி வந்துள்ளாய் என என் உள்மனம் சொல்கிறது. 'நீ எங்கிருந்தாலும் சரி, நான் படும் பாட்டைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய்? இப்படி ஒருவன் துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறானே என்று நினைந்து, ஆஆ. (ஐயோ பாவம்) என்று நீ கூறுவாயேயானால் அதைக் கேட்க நான் ஆசைப்படுகின்றேன். 'இன்னும் ஆஆ என்று நீ கூறவில்லை. என்னுடைய துன்டமோ அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதாவது என்னைப் பார்த்து, அளியன்’ (இரக்கத்துக்குரியவன்) என்று நீ கூற அதைக் கேட்க ஆசைப்படுகின்றேன். ‘ஐயனே! நிலைமை முற்றிவிட்டது. என்னைத் தாங்குவார் யாருமில்லை. இப்பொழுது நீ அளியன்’ என்று சொல்லிப் பயனில்லை 'அஞ்சேல் என்று கூறவேண்டும். அவ்வாறு நீ கூற அது என் காதுகளில் விழுந்தால் உறுதியாக என்னைக் காக்க வருவாய் என்ற நம்பிக்கை ஏற்படும்.