பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 335 சொற்களாக அவை அமையலாம். பொதுவினில் வருக என்ற ஆணையில் அது நிறைவேறிவிட்டது. அடுத்தது, அடிகளாரின் விருப்பத்திற்கேற்ப ஏதாவது பேசலாம். என்ன என்ன சொற்களைக் குருநாதர் பேசினால் தம் செவி, உள்ளம், உயிர் என்பவை களிப்படையும் என்று அடிகளார் நினைத்தாரோ, அவற்றை வரிசைப்படுத்தி, "ஐயா! நீ இந்தஇந்தச் சொற்களைப் பேசவேண்டும்; என் காதும், உயிரும் குளிர அவற்றை நான் கேட்கவேண்டும்’ என்ற முறையில் வரிசைப்படுத்தி ஆறு விதமான தொடர்களை அடிகளாரே பேசுகின்றார். அவையாவன, "கூவிக்கொள்ளாய் கோவேயோ' (419) ‘சிறுகுடில் இது சிதையக் கூவாய் கோவே' (420) 'ஆ ஆ என்ன ஆசைப்பட்டேன்’ (420) அளியன் என்ன ஆசைப்பட்டேன்’ - (422) 'அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன்’ (427) “இங்கே வா என்று அங்கே கூவும் அருளைப் பெறுவான்ஆசைப்பட்டேன்’ (418) என்பவையாம். இந்த முறைவைப்பில், அடிகளாரின் ஆசை முளையாகத் தொடங்கி ஆறாவது கட்டத்தில் ஒரு பெரிய விருட்சமாகவே விரிந்துவிடுகிறது. குருநாதரோ எதிரே இல்லை. அவர் எங்கிருக்கிறார் என்று கண்ணால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. எதிரே வருமாறு வேண்டிக்கொள்ள அடிகளாருக்கு உரிமையும் இல்லை. அங்கு இங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக் கின்ற குருநாதர் கண்ணுக்குத் தென்படாவிட்டாலும், எங்கோ இருந்துகொண்டு தம்மைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார் என்ற எண்ணம் அடிகளாரின் மனத்தில்