பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இப்பொழுது அடிகளாரின் மனம் இரண்டை இழந்து துன்புறுகின்றது. முதலாவது பரு வடிவுடன், கருணை ததும்பும் கண்களுடன், புன்சிரிப்பு மாறாத திருவாயுடன் காட்சிதந்த அந்தக் குருநாதர் வடிவம் இப்பொழுது மறைந்துவிட்டதே என்ற Ꮷjaféöyüü. இரண்டாவது, உள்ளவர்களைப் பிணித்து ஈர்க்கும் சொற்களைப் பேசும் குருநாதர் மறைந்துவிட்டதால் அந்தப் பேச்சை இனிக் கேட்கமுடியாதே என்ற கவலை. இந்த நிலையில்தான் ஐயனே! நீ ஏதாவது பேச வேண்டும். அதை நான் காது குளிரக் கேட்கவேண்டும்’ என்பதைப் பின்வருமாறு வெளிப்படுத்துகின்றார். பாடல் ஆதலால் இந்த ஆறு இடங்களும் முன்பின்னாக அமைந்திருப்பினும் இவற்றை முறைப்படுத்திக் கண்டால் குருநாதர் என்ன என்ன சொற்களால் பேசவேண்டும் என்று அடிகளார் ஆசைப்படுகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது குருநாதர் மறைந்துவிட்டார். அவராக விரும்பிவந்து காட்சி தந்து ஆண்டுகொண்டாரே தவிர, அடிகளார் விருப்பத்திற்காக எதையும் செய்யவில்லை எனவே, மீட்டும் அவராக விரும்பி வந்தாலன்றி அடிகளார் எத்தனை கூப்பாடு போட்டாலும் அவர் வரப் போவதில்லை என்பதை அடிகளாரே தெரிந்துள்ளார். மறைந்துவிட்ட குருநாதரை மீட்டும் வருக என்று வேண்டிக்கொள்ள அடிகளாருக்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆனால், தேனினும் இனிய அந்தக் குருநாதரின் குரலை, செவிவழிப் புகுந்து நெஞ்சை நிரப்பி உயிரையும் உண்ட அந்தக் குரலை, மீட்டும் மீட்டும் கேட்கவேண்டும் என்ற தம் விருப்பத்தைத்தான் இந்த ஆறு இடங்களில் வெளிப்படுத்துகின்றார். குருநாதர் பேசுவது என்றால், அது இருவகையில் அமையலாம். ஒன்று, அவர் விருப்பத்தை வெளியிடும்