பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 339 ‘எம்பெருமான் பெருமான் என்று வாயால் அரற்றி" என்கிறார். பேர் ஆயிரம் பரவி ஏத்திய அடிகளார், அந்த ஆயிரத்தையும் மறந்து அரற்றத் தொடங்கியவுடன் ‘எம்பெருமான் என்ற ஒரே சொல்தான் எஞ்சிநிற்கிறது. கண்ணைப்பற்றிப் பேசும்பொழுது இப்பிறப்பைக் கடந்துள்ள நிலைபற்றிப் பேசினாரல்லவா? அதேபோல அரற்றுகின்ற நிலையும் இப்பிறப்பில் நடைபெறுவதை அவர் பேசவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 424 ஆம் பாடலை மறுபடியும் ஒருமுறை நோக்குதல் நலம். 'வாரா உலகம் தந்து வந்து ஆட்கொள்வானே என்று கூறியதால் இப்பிறப்பைக் கடந்த நிலையை நினைத்தே பேசுகிறார் என்று கொள்வதில் தவறில்லை. இதுவரை, மேலே கூறியுள்ளவை வாலாயமாகப் பொருள் கூறுபவர்கள் கருத்துக்கு மாறாக அமைந்திருத்தலைக் காணலாம். பிறப்பை நீக்கவேண்டுமென்று இப்பாடல்களில் வரும் பகுதிகளைத் தனியே எடுத்துப் பொருள்கூறிவிட்டு அதனுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் பின்னர் வரும் பகுதிக்கு உரைகூறுவது பொருந்துமாறு தெரியவில்லை. பொறி புலன்களுக்கு இத்தனை பணிகளை இடுகின்ற அடிகளார், மேலுள்ள இரண்டு அடிகளில் பிறப்பைச் சாடி இது ஒழியவேண்டுமென்று பாடுகின்றார் என்றால், இந்த இரண்டு கருத்துக்களுக்குமிடையே ஏதாவது ஒரு தொடர்பு இருத்தல்வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. குரு தரிசனம் முதலிய நிகழ்ச்சிகள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்காத ஒன்று. அதனால் அடிகளார் பெற்ற இறையனுபவம் முன்பின் காணாததும் ஈடிணை இல்லாததுமாகிய ஒன்று. ஆனால், இத்தனையும் ஒரு விநாடியில் மறைந்து விட்டதாலும், அடியார்களோடு தாம் போகமுடியாமை யாலும் இந்த உடம்பின்மேலும் பிறப்பின்மேலும் தீராத