பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஏன் தொடரவில்லை என்ற வினா விஸ்வ ரூபம் எடுக்கின்றது. அடியரில் கூட்டிய அதிசயம் தொடராமைக்குரிய காரணத்ச்ை சிந்திக்கத் தொடங்கிய அடிகளாருக்குச் சில உண்மைகள் தெற்றெனப் புலப்படுகின்றன. பாலுணர்வு முதல், நீதியை அறியாமல் இருப்பது, பரவுவார் பின்செல்லாமல் இருப்பது, மலர் பறித்து இட்டு இறைஞ்சாமல் இருப்பது, ஐந்தெழுத்து ஒதாமல் இருப்பது ஆகிய காரணங்களால் ஒருவேளை குருநாதர் விட்டுச் சென்றுவிட்டாரோ என்ற ஐயம் தோன்றலாயிற்று. ஆனால் இவையெல்லாம் இருக்கும் பொழுதுதானே, வலியவந்து தம்மைப் பிடித்து ஆண்டார்; அடியரில் கூட்டினார் என்றால், அது தொடராமைக்குக் காரணம் இவையல்ல என்ற முடிவிற்கு வருகிறார். பின்னர் எது காரணம் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இந்த உடம்போடு இருப்பதுதான் காரணம் என்ற முடிவிற்கு வருகிறார். ஆகவே, உடம்பின் மேல் வெறுப்புப் பெரிதாக வளர்ந்துவிடுதலின் பொத்தை ஊன் சுவர் (484) என்று பாடத் தொடங்கிவிடுகிறார். அடிகளாரின் ஆழ்மனத்தில் தோன்றிய இந்தப் போக்கு, மிகவும் ஆபத்தானது. அவன் செத்திடப் பணிக்கவில்லை என்றால், தாமே அதனைச் செய்தாலென்ன என்ற தவறான முடிவிற்கு அவர் சென்று விடக்கூடும். அந்த நிலையில், கூத்தன் தலையிட்டு, அவர் மனநிலையை எப்படித் திசைமாற்றுகிறான் என்பதைச் சற்று விரிவாகக் காண்டல் நலம். பொத்தை ஊன் சுவர் என்ற பாடல் முதல் இருள் திணிந்து எழுந்திட்டது வரையுள்ள (434-437) நான்கு பாடல்களையும் தனியே ஒருமுறை படித்தால், சில சிந்தனைகள் தோன்றுவதைக் காணலாம். 434, 437 ஆகிய இரண்டு பாடல்களிலும் இந்தப் பரு உடல் மிக இழிவாகப் பேசப்படுதலைக் காணலாம்.