பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 343 கூடிச்சென்று அதன் பயனைப் பெறமுடியாவிட்டாலும் போகட்டும், இறைவனைப் பரவுகின்றவர் செயலைப் பார்த்து அவர்களைப்போல் ஈடுபாடு கொள்ளாவிடினும் அவர்கள் செயலையாவது தாமும் செய்திருக்கலாமே! அவர்கள் செயல்களாவன யாவை? 'பல் மலர் பறித்து’ அவன் திருவடிகளில் சாத்தி ஏத்துதலே அவர்கள் செயலாகும். அதனையாவது செய்திருக்கலாம். ஆனால், அதைக்கூடச் செய்யவில்லை என்கிறார் அடிகளார். இவையொன்றும் செய்யாவிடினும் ஐந்தெழுத்தை யாவது நினைந்திருக்க வேண்டும்; அதுவுமில்லை. கலை ஞானியரோடு பழகும் நல்வாய்ப்பையும் தம் அறிவுக் குறைவால் இழந்தவிட்டதாகக் (4.33) கூறுகிறார். மேலே கூறியவற்றையெல்லாம் ஒருங்குவைத்து எண்ணிப் பார்த்தால் தாம் சில தவறுகளைச் செய்ததாக அடிகளார். பேசுவதைக் காணலாம். அவையாவன உடம்பை மெய் என்று கருதியது; பொறி புல ஈடுபாட்டால் மகளிர் மையலில் வீழ்ந்தது என்பனவாம். இவை இரண்டும் உடம்பு பற்றியன. உடம்பாலும், மனத்தாலும், அறிவாலும், உணர்வாலும் தவறுகளைச் செய்த தம்மை, இறைவன் ஆண்டுகொண்டதே ஒரு பெரிய அதிசயம். அதைவிடப் பெரிய அதிசயம், மெய்யடியார்களோடு தம்மைச் சேர்த்துக்கொண்டது என்கிறார். அரு நரகில் வீழ்வதற்கு விரைவாகச் சென்று கொண்டிருந்த தம்மைத் தடுத்து ஆட்கொண்டு அடியரில் கூட்டியது அதிசயத்திலும் அதிசயம் என்ற வியப்பில் மகிழ்ந்தார். அடிகளாரின் அடிமனத்தில் இந்த மகிழ்ச்சியின் ஊடே ஒரு பெருங்குறை தோன்றி, விரைவாக வளர்ந்து விடுகிறது. இத்தனை தவறுகள் தம்மிடம் இருந்தும், அடியரில் கூட்டியது அதிசயம்தான். என்றாலும், கூட்டியது