பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 347 இந்தப் பரம்பொருள் உற்ற ஆக்கையில் தங்கியுள்ளது என்ற உணர்வு தோன்றியவுடன் இந்த ஆக்கை பழிக்கத் தகுந்ததன்று என்ற மெய்யறிவு பிறக்கின்றது. இதுவரை அவருடைய பின்னோக்குப் பார்வையை அனுமதித்த கூத்தன், அதற்குத் தடை விதித்துவிட்டான். கனவிலிருந்து விழித்து எழுபவன் கனவை மறப்பதுபோல 435ஆம், 436ஆம் பாடல்களில் சொல்லப்பெற்றவற்றை அறுதியாக மறந்துவிடுகிறார் அடிகளார். 428 ஆம் பாடல் முதல், 434 ஆம் பாடல் வரை ஏழு பாடல்களில் உடம்பின் செயற்பாடுகளையும் உடம்பையும் பழித்துக் கூறிய அடிகளார் மறுபடியும் இறுதிப்பாடலில் (437) இருள் திணிந்து எழுந்திட்டது ஒர் வல்வினைச் சிறுகுடில்’ என்று மீண்டும் உடம்பைப் பழித்துப் பாடத் தொடங்கிவிட்டார். அதிசயப் பத்தில் 434 ஆம் பாடல் அடிகளாரின் போக்கில் ஒரு திருப்புமுனையாக (turning point) அமைந்துள்ளது. உடனே தில்லைக்கூத்தன் பின்னோக்கிப் பார்க்கும் ஆற்றலை அடிகளாருக்கு வழங்க, 435ஆம் 436ஆம் பாடல்கள் வெளிவருகின்றன. அந்தத் திருப்புமுனை ஆபத்துத் தீர்ந்துவிடுகிறது; பின்னோக்கிப் பார்க்கும் ஆற்றலைத் கூத்தன் திரோதான சக்தியால் மறைத்து விடுகிறான். 434ஆம் பாடலைப் பாடிய அதே அடிப் படையில் 437ஆம் பாடல் தோன்றுவதைக் காணலாம். இதே போன்றதொரு சிக்கல் மறுபடியும் தோன்ற, பின்னோக்கிக் காணும் சக்தியை, கூத்தன் வழங்குகின்றான். இதன் பயனாக உருத் தெரியாக் காலத்தே (திருவாச:477) என்று தொடங்கும் கண்ட பத்துப் பதிகப் பாடல் வெளிப்படுகிறது. கூத்தனின் இதே திரோதான சக்தி மீட்டும் பணிசெய்ய, கல்லாத புல்லறிவில் கடைப்பட்ட நாயேனை (478) என்றும் பாடல் அடுத்து வெளி வருவதையும் இங்கு ஒப்புநோக்கலாம். -