பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 வேண்டும் என்ற கருத்தில், புரிந்து நிற்பது என்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்து' என்றார். இறைப்பிரேமையின் முதல் நிலையாகும் இது. அடுத்தபடியாக, பொருளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அதனிடம் நெருங்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றாலொழிய அதனைப் புரிந்துகொள்ள முடியாது என்பதைப் புக்கு நிற்பது என்று குறிப்பிட்டார். இது இறைப்பிரேமையின் இரண்டாவது நிலையாகும். ‘புக்கு நிற்பது என்ற எண்ணம் தோன்றியவுடன், புகுகின்ற செயல் தொடங்கிவிடுகிறது. இதில் ஒரு விந்தை எதற்காகப் புக வேண்டும் என்று விரும்பினார்? அப் பொருளை நன்கு புரிந்துகொள்வதற்காகத்தானே! ஒன்றைப் புரிந்து கொள்வதும் அதனிடம் புகுவதும் நான் செய்கின்ற செயலாகும். இந்த நான் புகுதலாகிய செயலைச் செய்தவுடன் இது எதிர்பார்த்தது நடைபெறவில்லை. அதாவது, புரிந்துகொள்ளும் ஆராய்ச்சியைத் தொடர வில்லை. அதற்குப் பதிலாக இறைப் பிரேமையின் உச்சகட்டத்தில் இந்த நான் புகுந்து விட்டமையின் இது தன்னையே இழந்துவிட்டது. ஆற்றில் நடப்பட்ட கம்பின்மேல் வெள்ளம் பாயும்போது கம்பு மறைவது போல, இறைப் பிரேமை அனுபவத்தில் இந்த நான்' மூழ்கிவிட்டது. இந்த மூன்றாவது நிலையில் என்ன நடைபெற்றது என்பதை அடிகளாரே "நெக்கு நெக்கு உள் உருகி உருகி நின்றும், இருந்தும், கிடந்தும், எழுந்தும், நக்கும், அழுதும், தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தால் கூத்து நவிற்றும் நிலை ஏற்படுகிறது என்று கூறுகிறார். தன்னை மறத்தல், தொழுதல் ஆடுதல் பாடுதல் என்ற நிலை இறைப் பிரேமையில் ஒரு முடிவான கட்டமாகும். இதற்கு முன்னர்ச் சொல்லப்பெற்ற நிலைகளைக் கடந்து இந்த நிலையை அடைகின்றனர் அருளாளர்கள். ஆனால், இந்த நிலையில் தற்போதம் பெரும்பகுதி அழிந்து, செய்வது