பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 351 அறியாது நிற்கின்ற நிலை ஏற்படுகின்றது. இறைப் பிரேமைபிற்க.ட இந்த நிலையில் முழுநேரமும் இருத்தல் இயலாத காரியம், உணர்ச்சி என்பது அலைகள் போல் ஏறி இறங்கும் இயல்பினது என்று முன்னரே பலமுறை எடுத்துக் காட்டியுள்ளோம். அந்த அடிப்படையில் கண்டால், தம்மை மறந்து ஆடுதல் பாடுதல் முதலியவைகளில் ஈடுபடுதல் இறைப் பிரேமையின் முடிவான கட்டமாகும். அதிலேயே நீண்டநேரம் நிற்க முடியாது ஆதலால், இந்த மூன்றாவது நிலையிலிருந்து இறங்கிவரும்போது அதுவரை அடங்கித் தொழிற்படாது இருந்த நான் இப்போது மெல்லத் தன் பணியைச் செய்யத் தொடங்குகிறது. இங்கே, தன்னை மறந்த நிலை எதுவும் இல்லை. என்ன செய்யவேண்டும் என்பதை, பழைய அனுபவத்தின் துணைகொண்டு நான் முடிவு செய்கிறது. எதிரே உள்ள அந்தப் பொருளை இன்னும் நெருங்கிச் சென்று பக்கத்தில் இருக்கவேண்டும் என்பன போன்ற புடைபட்டிருப்பது-438) விருப்பங்கள். அந்த நான் இடத்தில் தோன்றுகின்றன. அதன் விரிவே இங்குப் பேசப்பெறுகின்றது. புடைபட்டு அமர்ந்தவுடன் இந்த நான் இடத்தில் ஒரு புதிய விருப்பம் தோன்றுகிறது. இது நான்காவது நிலையாகும். இந்த நிலையில் அந்தப் பொருளைப் போற்றிப் புகழவேண்டும் என்று நினைக்கிறது. புகழ்ந்து நிற்பதுடன் புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறது. இது மொழியின் செயலாகும். அடுத்து, பாதப்போது ஆய்ந்து 'பூப்போதை அதன்மேல் இட்டு அருச்சித்து அதனோடு அமையாமல் புனைந்த மலரால் (கட்டப்பட்ட மாலையால் அத்திருவடியை அலங்கரிக்க வேண்டும் என்று அந்த 'நான்' நினைக்கின்றது. இது உடம்பின் செயலாகும். நெக்கு நெக்கு உருகி, தழுத்த கண்டம் கனைய கண்ணிர் அருவி பாய, என்பவை மனத்தின் செயலாகும்.