பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஆயமாய காயந் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார் மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே (திருமுறை: 1-50-7) என்று பாடியுள்ளது நம் மனத்தில் புதிய சிந்தனையைத் துண்டுகிறது. ஆளுடைய நம்பிகளைப் பொறுத்தமட்டில் இறைவன் ஆணையால் இவ்வுலகிடை வந்தார் என்றும், பரவையார், சங்கிலியார் ஆகிய இருவரையும் இறையருளாலேயே மணந்தார் என்றும், தேவைப்படும் பொழுதெல்லாம் இறைவனை வேண்டிப் பொன் பெற்றார் என்றும் வரலாறு பேசிச்செல்கிறது. இறுதிவரை இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஆளுடைய நம்பி, திருஎதிர்கொள்பாடிப் பதிகம் முழுவதிலும் இல்லற வாழ்க்கையைத் தாம் வெறுக்கின்ற இயல்பைப் பாடியுள்ளார். இதன் சிறப்பு என்னவென்றால், எதிர்கொள்பாடிப் பதிகம் பாடிய பிறகும் அவர் இல்வாழ்க்கையில்தான் இருந்தார். ஆனால், அப்படிப்பட்ட ஒருவர், நண்பர் சேரமான் பெருமானோடு சேர்ந்து இருக்கின்ற நேரத்தில், திருவஞ்சைக்களத்துத் திருக்கோயில் சென்று வழிபடும் போது வெறுத்தேன் மனை வாழ்க்கை (திருமுறை: 7.4-5) என்று பாடுவதன் நோக்கமென்ன? மனை வாழ்க்கையில் துன்பத்தையோ வெறுப்பையேர் தரக்கூடிய எந்த நிகழ்ச்சியும் நம்பியாருரர் வாழ்க்கையில் நடைபெற்றதாகத் தெரியவில்லை. அப்படியிருக்க 'வெறுத்தேன் மனை வாழ்க்கை என்று பாடவேண்டிய தேவை என்ன? இறைவனைத் தம் தோழனாகக் கொண்டு வாழ்ந்தவர் சுந்தரர், சத்திய சொரூபியாகிய இறைவனைப் பார்த்து, நீ கோயிலுள் இருக்க வேண்டா, மகிழ மரத்தடியில் சென்று உறைவாயாக’ என்று வேண்டிக்கொள்ளும் அளவிற்கு, இறைவனிடம் உரிமை கொண்டாடும் சுந்தரர்