பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 355 ஆளுடைய அரசைப் பொறுத்தமட்டில் பிற சமய நுணுக்கங்கள்பற்றி அறிவும் பரந்த உலகியல் அறிவும் பன்மொழிப் புலமையும் நிறைந்திருந்தன. என்றாலும், பொறி, புலன் சேட்டைபற்றி அந்தப் பெருந்துறவியும் பின்வருமாறு பாடுகின்றார். அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழிதரும் ஆதனேனை (திருமுறை:4-26-5)


வஞ்சக்கள்வர் ஐவரையும் என்மேல் தாவு அறுத்தால் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை

(திருமுறை: 6-99-3) ஆளுடைய பிள்ளை சீவன்முத்தராக இருந்து, இறைவனது ஆணையால் சில குறிப்பிட்ட செயல்களை நிறைவேற்ற இவ்வுலகிற்கு வந்தவராவார். இந்த அடிப் படையைப் பிள்ளையார் தாமே நன்கு உணர்ந்திருந்தார் என்பதைத் துறக்குமா சொலப்படாய் துருத்தியாய்” (திருமுறை:2-98-5) என்று தொடங்கும் பாடல் மூலம் அறியமுடிகிறது. எண்பத்து நான்கு லட்சம் உயிர் வர்க்கங்களைப் படைத்து, ஒவ்வொரு உயிரின் உள்ளேயும் அந்தர்யாமியாய் அவனே உள்ளாள் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். இதனை 'உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் (திருமுறை:1-1324) என்று தொடங்கும் பாடல் மூலம் அறியமுடிகிறது. இதே பிள்ளையார் இறை இலக்கணம் பேசத் தொடங்கி ஈறாய் முதல் ஒன்றாய்” (திருமுறை:1-11-2) என்ற பாடலில் 'அவன் வேறாய் உடன் ஆனான்’ என்று பேசுகிறார். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்து அனைத்திலும் இறைவனைக் காணும் இந்த மகாஞானிக்குப் பொறி, புலன்களின் சேட்டை இருந்தது என்று சொன்னால், அது நம்பமுடியாத ஒன்றாகும். என்றாலும் அப்பெருமகனாரே திருவலிவலப் பதிகத்தில்,