பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 359 வெறுத்துவிட்டது என்று நொந்துகொள்கிறார். அதுவே வாழாப் பத்தாகும். திருவாசகத்தின் பிற பகுதிகளில் காணப்பெறாத ஒரு புதிய சிந்தனை ஒட்டம், வாழாப் பத்தில் இடம் பெறுகிறது. குருநாதரையும் தொண்டர்களையும் விட்டுப் பிரிந்தமைக்குத் தாமே காரணம் என்று இதுவரை கூறிவந்த அடிகளார். இப்போது இறைவனையே சில வினாக்கள் கேட்கத் தொடங்குகிறார். அடிமையின் <开ö துக்கங்கள் ஆண்டானைப் பொறுத்தனவன்றோ! அடிமை தனக்கு என்ன வேண்டும் என்று கேட்கின்றவரையில் விட்டுவைப்பது ஆண்டானுக்கு அழகல்லவே! ஆண்டான் ஒருவேளை அதைச் செய்ய மறந்தாலும், அடிமைபற்றிய கருணை அவனிடம் நிறைந்திருக்கவேண்டும். அது இறைவன்பால் இல்லை. என்று சொல்லும் தைரியம் இப்பதிகத்தில் காணப்படுகிறது. வாழாப் பத்தின் முதற் பாடலில் ஆண்ட நீ அருளிலையானால்’ என வரும் பகுதி சிந்தனைக்குரியது. திருப்பெருந்துறையில் கோலமார்தரு பொதுவினில் வருக’ என்று கூறினாரே தவிர, இவரை ஆண்டுகொண்டதாகக் குருநாதர் கூறவில்லையே! அப்படியிருக்க ஆண்ட நீ என்று அடிகளார் கூறுவது எவ்வாறு பொருந்தும்? திருப்பெருந்துறையில் குருநாதர் முன்பு தமக்குக் கிடைத்த அனுபவங்களையெல்லாம் ஒன்றுசேர்த்துத் திரட்டி, பின்னோக்காகப் பார்க்கும்பொழுது அவர் ஆண்டுகொண்டார் என்று அடிகளார் மனத்தில் புலப்படுகிறது. அவர் ஆண்டுகொண்டிருந்தா லொழிய இத்தகைய அனுபவங்கள் கிடைக்குமாறில்லை. குளம் நிறைந்துவிட்டது என்ற காரியத்தை வைத்து மழை பெய்துள்ளது என்ற காரணத்தை அறிந்துகொள்வதுபோல இந்த அனுபவம் கிடைக்கவேண்டுமானால், நிச்சயமாக