பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலப் பத்து 29 வாழி எப்போது வந்து எந் நாள் வணங்குவன் வல் f வினையேன் ஆழிஅப்பா உடையாய் அடியேன் உன் அடைக்கலமே 6 மத்து, தயிரில் இடப்படுவதன் முன்னர் அத்தயிர் கெட்டித்தன்மை உடையதாய், ஒரளவு சலனமற்று இருக்கின்றது. மிக இன்றியமையாத வெண்ணெய் அத்தயிருள் மறைந்திருப்பதுபோல் முன்னேற்றம் அடையவேண்டிய ஆன்மா, உடலைப் பற்றிய கருவி, கரணங்கள் என்பவற்றின் உள்ளே மறைந்து கிடக்கிறது. திருவருள் என்ற மத்து இத்தயிருள் புகுந்து இதனைக் கடைந்திருப்பின் ஆன்ம முன்னேற்றம் கிடைத்திருக்கும். ஆனால், திருவருள் என்ற பெரிய மத்துக்குப் பதிலாகப் பெண்ணாசை என்ற சிறிய மத்து இப்பொறி, புலன்களைக் கலக்கியதால், கடைதலின் உண்மைப் பயன் கிட்டாமல் போய்விட்டது என்பது குறிப்பெச்சம். 'தாழியைப் பாவு தயிர்' என்றதால் இந்த உடம்பினுள் இருக்கும் பொறி, புலன்கள் பெண்ணாசை என்ற மத்துப் பட்டவுடன் தாழியைப் பாவு தயிர்போல் இந்த உடம்பையே சுற்றிச் சுற்றி வருகின்றன. தயிரின் அளவுக்கு ஏற்ப மத்தின் அளவும் மாறுபட வேண்டும். பெரிய தயிர்ப் பானையில் மகளிர் ஆசை என்னும் சிறியதொரு மத்தைக் கொண்டு கடைந்தால், தயிர் கெட்டித்தன்மையை இழந்து பானையைச் சுற்றிச் சுற்றி வருமே தவிர வெண்ணயைத் திரள வைக்காது. அதேபோலப் பேராற்றலுடைய பொறி, புலன்களோடு கூடிய மனம் தயிர்போன்று உள்ளது. இதனைக் கடைந்து பயன்பெற வேண்டுமானால் திருவருளாகிய பெரிய மத்து வேண்டும்.