பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 414. மின் கணினார் நுடங்கும் இடையார் வெகுளி வலையில் அகப்பட்டுப் புன் கணன் ஆய்ப் புரள்வேனைப் புரளாமல் புகுந்து அருளி என்கணிலே அமுது ஊறித் தித்தித்து என் பிழைக்கு இரங்கும் அம் கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கல்மே 7 ஒரு துறையில் அதீதமாகச் செல்பவர்கள் அதிலிருந்து மீள்வது கடினம். மீள்வதானால், எவ்வளவு வேகமாக முன்னர்ச் சென்றார்களோ அதே வேகத்தோடு எதிர்த் திசையிலும் செல்ல வல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்து, உலகிடைச் சில மனிதர்களைப்பற்றி அறிஞர்கள் கூறும் கருத்தாகும். இக்கருத்தை மனத்துட் கொண்டு இப்பாடலுக்குப் பொருள்செய்தல் நலம். முதலில் நடைபெற்றது என்ன? ஒளி பொருந்திய கண்ணையும் நுடங்கும் இடையையும் உடைய பெண்களின் உண்மையான ஊடல் அல்லாத சினம் என்னும் வலையில் அகப்பட்டு, மீளமுடியாமல் பெருந்துன்பத்தை அனுபவித்துப் புரண்டுகொண்டிருந்த தம்மை, புரளாமல் தடுத்ததோடு அல்லாமல் தம்முள் புகுந்து அருளினான் என்கிறார். அதன் பயனாக என்ன நிகழ்ந்தது? அவனே உள்ளே புகுந்துவிட்ட காரணத்தால் கண்ணிர் பெருகலாயிற்று. இந்தக் கண்ணிருக்குச் சில விளக்கங்கள் தருகிறார் அடிகளார். புகுந்து அருளி என் கணிலே அமுது ஊறி, தித்தித்து’ என்பது அடுத்துநிற்கும் தொடராகும். புகுந்து அருளியதால் என் கண்ணில் நீர் ஊறிற்று; நெஞ்சில் அமுது ஊறிற்று; நெஞ்சு தித்தித்தது. கண்ணில் நீர் உறுதல்மட்டும் புறத்தே திகழ்ந்த செயலாகும். அமுது ஊறுதலும், தித்தித்தலும் உள்ளத்தின் உள்ளே நிகழ்ந்த செயல்களாகும். உஇறுதலும், தித்தித்தலும், கண்ணில் "தி உஇறுதலும் அவ - * ன் உள்ளே புகுந்து அருளியதால் நிகழ்ந்த செயல்களாகும்.