பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைக்கலப் பத்து 31 மகளிர் வலையில் அகப்பட்டு நைந்து புரண்டதன் பின்னர், அவன் உள்ளே புகுந்து அருளியதால் இச் செயல் கள் நிகழ்ந்தன என்று கூறுவதன் நோக்கம் ஒன்றுண்டு. அவன் உள்ளே புகுவதற்கு முன்னரும், ஒரு சில மாற்றங்களுடன் இச்செயல்கள் நிகழ்ந்தன. மகளிர் கோபத்தைத் தணிக்க முடியாமையால் கண்ணில் நீர் ஊறிற்று; ஆனால், அது துன்பக் கண்ணிர், நைந்து புரண்டமையால் நெஞ்சில் அமுது ஊறுவதற்குப் பதிலாக வெறுப்புணர்ச்சியும் சினமும் ஊறின. அதே நெஞ்சில் தித்திப்பு ஏற்படுவதற்குப் பதிலாகக் கசப்புணர்ச்சியே மிஞ்சியது. துன்பக் கண்ணிர் ஆனந்தக் கண்ணிராக மாறியதும், வெறுப்புணர்ச்சிக்குப் பதிலாக நெஞ்சில் அமுது ஊறியதும், கசப்புணர்ச்சிக்குப் பதிலாகத் தித்திப்பு உணர்ச்சி ஏற்பட்டதும் அவன் உள்ளே புகுந்து அருளியதால் ஏற்பட்டன என்க. இதுபோன்று வரும் பாடல்கள் பலவற்றிலும் கண்ணார்தம் வலையில் அகப்பட்டு என்று பாடாமல் கண்ணார் தம் வெகுளிவலையில் அகப்பட்டு என்றே பாடிச் செல்கிறார். (திருவாச 414, 427) வலை என்ற சொல்லின் முன்னர் வெகுளி என்ற சொல்லைப் பலவிடங்களிலும் சேர்த்தது அடிகளாரின் வாழ்க்கையில் முன்னர் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளைக் குறிக்குமோ என்ற ஐயத்தை தோற்றுவிக்கிறது. இதன் அடிப்படை நன்கு விளங்குமாறில்லை. அடிகளாரைப் போன்று மேட்டுக்குடியில் பிறந்து ஒரு பேரரசின் அமைச்சனாகப் பன்னாள் இருந்த ஒருவருக்கு இத்தகைய அனுபவங்கள் கிட்டியிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. 6Ꮘa6al6ᎼᏈᎢ©al ஆழ்வார்களில் ஒருவராகிய திருமங்கையாழ்வார் மன்னராக இருந்தவர் என்பது