பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இந்தப் பதிகம் முழுவதும், அடிகளார் மனத்தில் தோன்றிய நம்பிக்கை இழப்பை (despai) படம்பிடித்துக் காட்டுவதாகும். சாதாரணமாக இவ்வுலக வாழ்வை நீத்து உன்பால் வரவேண்டும் என்று எல்லா அடியார்களும் பாடியுள்ளதை நாம் அறிவோம். ஆனால், அடிகளாரின் வாழாப் பத்து அந்த வகையைச் சேர்ந்ததன்று. திருப்பெருந்துறையில் குருநாதர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கியபோது தம் வாழ்விற்கு ஒரு பயன் கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கை மலைபோல் வளர்ந்தது. ஆனால், குருநாதர் மறைந்தபின்னர், நாட்கள் செல்லச் செல்ல, அந்த நம்பிக்கை சிறிது சிறிதாகக் கரைந்து, நம்பிக்கை இழப்பு என்னும் ஒரு நிலைக்கு அடிகளாரைத் தள்ளிவிட்டது. எனவேதான், இவருடைய வாழாப் பத்துப் பாடல்கள் ஏனைய அடியார்களின் பாடல்களைப்போல் அல்லாமல் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. அருட பத்து தேவார காலத்தில் பல வடசொற்கள் தமிழில் வந்து வழங்கியதைத் தேவாரத்தைக் கற்பார் அறியமுடியும். ஆனால், திசைச்சொற்கள் என்பவை இம்மொழியில் வந்து வழங்கலாம் என இலக்கணக்காரர்கள் கூறியிருப்பினும் தேவார காலத்தில் திசைச்சொற்கள் அதிகம் வழங்கியதாகக் கூறுவதற்கில்லை. ஆனால், அக்காலத்தை அடுத்துவந்த அடிகளார் காலத்தில், வட சொற்களோடு திசைச்சொற்களும் அவர் பாடல்களில் இடம்பெறலாயின. அடிகளார் காலத்திற்குச் சற்று முன்னர் வாழ்ந்த திருமூலரும் திசைச்சொற்களை எடுத்து ஆண்டுள்ளார். திருப்பெருந்துறை நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்தபின் மீட்டும் அதனைப் பெறவேண்டும் என்று மனத்தில் பெரிதாகத் தோன்றிய விருப்பம் நிறைவேறாமற் போகவே