பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 363 மனத்தின் நுணுக்கத்தை அறிந்த அடிகளார். இதனால் ஏற்படும் சிக்கலை நன்கு அறிந்தவராவார். திருப்பெருந் துறையில், திருவடிகள் மனத்தில் குடியேறியது உண்மை. இப்பொழுது அந்த மனத்தில் வேறு எவ்விதப் பற்றும் உள்ளே போகவில்லை என்பதும் உண்மை. இப்படியே வாழ்ந்துவிட்டுப் போகலாமே! இதற்காக ஏன் கவலைப்படவேண்டும்? இந்த உலகில் வாழவிரும்பவில்லை என்று ஏன் சொல்லவேண்டும்? ஆழ்ந்து சிந்தித்தால், இவ்வாறு கூறியதன் மூலம், மனித சமுதாயம் முழுவதற்கும் ஒரு நுண்மையான பாடத்தை அடிகளார் அறிவித்துள்ளார் என்பது புலப்படும். அதாவது, மனத்திலுள்ள பற்றுக்கள் நீங்கியவுடன் அந்தத் திருவடி உள்ளே புகுந்துவிட வேண்டும். ஒரு விநாடி தாமத மானாலும் முன்னர்க் குடியிருந்த பற்றுக்கள் ஆரவாரத்தோடு மறுபடியும் உள்ளே புகுந்துவிடும். பற்று நீங்கியவுடன், அந்தத் துய்மையான மனத்தோடு உடனே இறந்துபட்டிருந்தால் கவலையில்லை. கடைசியாக மனத்தில் குடியேறியது திருவடி குடியேறுவதற்கு முன்னரே எல்லாப் பற்றுக்களும் ஒழிந்துவிட்டன. இந்த நிலையில் இறந்துபட்டிருந்தால் உய்கதி கிடைத்தே தீரும். இதன் எதிராக, திருவடியும் உள்ளே இல்லாமல், மனத்திற்குரிய இயல்பான பற்றுக்களும் இல்லாமல், உலகில் வாழவேண்டி நேரிட்டால், அதைவிடக் கொடுமை வேறெதுவுமில்லை. ஆகவேதான் அடிகளார், 'ஆண்ட நீ" உன் திருவடிகளை στ6ύτ மனத்தில் வைக்க அருள் செய்யவில்லை. இந்த நிலையில் இந்த உலகில் ஒரு விநாடிகூட வாழ நான் விரும்பவில்லை என்ற கருத்தைப் பத்துப் பாடல்களிலும் பாடுகிறார்.