பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'பால்கொள் வெண் நீற்றாய் என்பது வெண்ணிறு அணிந்தவன் என்ற பொருளைத் தருமேனும் நீற்றாய் என்பது துகள் வடிவாக உள்ளவனே என்ற பொருளையும் தரும். 'பரன்’ என்பது எல்லாவற்றையும் கடந்து நிற்பது என்ற பொருளைத் தருவதால் அதற்கு நேரெதிரான நீறு துகள்) பேசப்பெறுகிறது. இதற்குமேல் ஒரு படி சென்று, நான்முகனும், நாரணனும், கானா, என்று சொல்லி அக்கினிப் பிழம்பாக நின்றதை நினைவூட்டாமல், அறியா என்று கூறி யாராலும் அறியப்படாதவன் என்ற கருத்தைத் தெரிவிக்கிறார். ‘மடந்தை பாதியே என்பது முதல் நீதியே என்பது வரை உள்ள பகுதி ஏறுமுக விளக்கமாகும். சோதியும் பரமும் நீதியும் என்ற மூன்றும் கருத்தளவையில் நிற்பனவே தவிர, இவற்றிற்கு வேறு வடிவம் இல்லை. மனத்தை மருட்டும் இந்த விளக்கங் களைக் கூறியவுடன் மறுபடியும் இத்தகைய ஒரு பொருள் மனிதர்களாகிய நமக்கு மிக நெருக்கமாய் உள்ளது என்பதை அறிவிப்பார்போலத் 'திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தம் மேவிய சீர் ஆதி என்று முடிக்கின்றார். ஒரே பாடலில் சோதியிற் தொடங்கி குருந்தமரத்தடிக் குருநாதரைக் காட்டி, இவை இரண்டும் ஒன்றே என்ற நினைவை நம்முள் ஊட்டுகின்றார். பிரபஞ்சம் முழுவதையும் நிறைத்துநிற்கும் சோதி எல்லாப் பொருளையும் விளக்குமேதவிர, ஒரு குறிப்பிட்ட சிறிய பொருளின்மேல், அதாவது ஒரு குறிப்பிட்ட ஆன்மாவின்மேல் ஆதிக்கம் செலுத்துவது கடினம் என்பதைக் கருதிப்போலும் விளக்கு என்று முடிக்கின்றார். விளக்கு என்றால் நம்முடைய கையில் அகப்பட்டு நம் ஆதிக்கத்தின்கீழ் இருக்கும் ஒன்றல்லவா? இக்கருத்தை ாற்றிவைத்துப் பார்த்தால் விளக்கு வடிவினதாகவுள்ள