பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 367 அப்பொருள் தனிப்பட்ட ஒருவரின்மேல் தன்னுட்ைய ஒளியைச் செலுத்தித் தன்னுடைய ஒளி ஆதிக்கத்தின்கீழ் அவரைக் கொண்டுவருகிறதல்லவா? இறைவனும் அதனையே செய்கிறான். - - நிருத்தனே நிமலா (459) என்று தொடங்கும் t_ffTL-60)%t) அமைதியாக இருந்து கற்றால், சில சிந்தனைகள் தோன்றாமற் போகாது. - - சூரியன் ஆகாயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு தனது ஒளிக் கிரணங்களால் உலகம் முழுவதையும் விளக்குகிறான். கதிரவன் மேகத்தால் மறைப்புண்ட நிலையிலும், கார் காலத்திலும்கூட இந்த ஒளி, உலகம் முழுவதும் வியாபித்து நிற்பதைக் காணலாம். ஆனால், இவ்வளவு ஒளியையும் வெளியிடுகின்ற கதிரவனைக் காணவேண்டுமானால் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில்தான் காணமுடியும். இவ்வாறு செய்யாமல் ஒளி விரிகின்ற இடங்களிலெல்லாம் சென்று 'கதிரவனே உன்னைக் காணவேண்டும்! கதிரவனே உன்னைக் காணவேண்டும்!’ என்று கூவினால் ஒன்றும் நடைபெறப்போவதில்லை. இறுதியில் திடீரென்று மேகங்களைக் கிழித்துக்கொண்டு அவன் வெளிவருகிறான். இந்த அடிப்படைதான் 459 ஆம் பாடலில் பேசப்பெறுகிறது. நிருத்தனே, நிம்லா, நெற்றிக்கண்ணனே என்று அலறிக்கொண்டு எங்கெங்கோ அடிகளார் தேடினார். சூரியனுடைய ஒளி எங்கும் நிறைந்திருப்பது போல் நிருத்தனும் நிமலனும் நெற்றிக்கண்ணனும் ஆகிய அவன், எங்கும் நிறைந்திருக்கின்றான். ஆதலால், அவனை நிருத்தனாகவோ நிமலனாகவோ நெற்றிக்கண்ணனாகவோ காண்டல் முடியாது. அதனால்தான் 'ஓலமிட்டு அலறி உலகெலாம் தேடியும் காணேன்' என்கிறார் அடிகளார்.