பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இப்படித் தேடப்பட்ட கதிரவன், மேகத்தைக் கிழித்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வடிவுடன், நம் கண் காணுமாறு தோன்றுவதுபோல, திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தத்தின் அடியில், அடிகளார் தேடிய நிருத்தனும் நிமலனும் நெற்றிக் கண்ணனுமாகிய அவன், புறக்கண்ணாலும் காணக்கூடிய முறையில் குருநாதர் வடிவில் அமர்ந்திருந்தான் என்றபடி இப்பொழுது அடிகளார் உலகெலாம் தேடுவதை விட்டுவிட்டு, திருப்பெருந்துறையில் குருந்தமரத்தடியில் அவர் இருப்பதைக் காண்கிறார். முதலில் அவர் கண்ணில் பட்டது துறவுக்கோலம் பூண்ட குருநாதர் வடிவம். தாம் உலகெலாம் தேடிய ஒருவர், இதோ மரத்தடியில் துறவியாக அமர்ந்துள்ளார் என்ற நினைவு வந்தவுடன், துறவி மறைகிறார்; மடந்தை பாதியனாக உள்ள ஒருவன், தலையில் தாங்கிய கங்கையோடு காட்சியளிக்கிறான். ஒகோ. இவர் துறவியல்லர். இரு மங்கையரை மணந்த நிருத்தர்போலும் என்ற எண்ணம் ஒரு விநாடி மனத்திடைத் தோன்றுகிறது. அடுத்த விநாடி இவர், இருவர் தங்கள் நாயகனாக (46) இருந்தால் என்ன? 'காமன் தனது உடல் தழல் எழ விழித்த செங்கண் நாயகன் அல்லவா என்ற எண்ணம் தோன்றவே, இத்தனை பெரிய மூர்த்தி இதோ எம் எதிரே அமர்ந்துள்ளாரே என்று மகிழ்ந்து, அவரை அழைக்கின்றார். குருநாதர் வடிவில் இருந்தவர் விடைகூறவில்லை. மனம் வருந்திய அடிகளார், ஐயா! நீ என்னுடன் பேசி என் துயரத்தைக் களையாவிட்டாலும் சரி, நான் கதறுவதைக் காதில் கேட்டு, "அது என்ன? ஏன் கூவுகிறாய்?" என்று ஒரு வார்த்தையாவது கேட்டருளக் கூடாதா?’ என்கிறார். இரு மடந்தையரை உடைய இறைவனைக் காமனை வென்றவன் என்று கூறுவது இந்த நாட்டிற்கே உரிய பண்பாகும். இறைவனைப் பொறுத்தமட்டில் இவ்வாறு